5 வருட வாரண்டியுடன் புதிய ஸ்டார் சிட்டி: டிவிஎஸ் அறிமுகம்

2012 Tvs Star City
ரூ.38,650 என்ற ஆரம்ப விலையில் புதிய ஸ்டார் சிட்டியை டிவிஎஸ் மோட்டார்ஸ் சற்றுமுன் அறிமுகம் செய்தது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான பைக் மாடல்களில் ஒன்றாக ஸ்டார் சிட்டி விளங்குகிறது. குறிப்பாக, கிராமப்புற சந்தையில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.

இந்த நிலையில், சந்தை போட்டியை சமாளிக்கும் விதத்தில் ஸ்டார் சிட்டியின் மேம்படுத்தப்பட்ட மாடலை டிவிஎஸ் மோட்டார்ஸ் இன்று அறிமுகம் செய்துள்ளது.

110 சிசி எஞ்சின் கொண்ட ஸ்டார் சிட்டி தற்போது எலக்ட்ரிக் கிரின், போல்டு புளூ, ரெட் பிளேஸ், கோல்டு ஸ்பார்க், சில்வர் ஸ்ட்ரைக் மற்றும் கிரிம்சன் பிளாஷ் ஆகிய 6 டியூவல் டோன் கலர்களில் வருகிறது.

கருப்பு நிறத்தில் அலாய் வீல்கள், ஹீட் ஷீல்டு உள்ளிட்ட அம்சங்களுடன் கண்களை கவர்கிறது புதிய ஸ்டார் சிட்டி. 2012ஸ்டார் சிட்டி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய பைக் தனது மார்க்கெட்டை நிச்சயம் தக்க வைக்கும் என்று டிவிஎஸ் கருதுகிறது.

இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார்ஸ் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் எச்.எஸ்.கோயிந்தி கூறுகையில்," "கவர்ந்திழுக்கும் ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் அம்சங்களுடன் வந்துள்ள புதிய ஸ்டார் சிட்டி வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக கவரும்.

அதிக உறுதி மற்றும் கூடுதல் மைலேஜ் கொடுக்கும் அம்சங்களுடன் 2012 ஸ்டார் சிட்டி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது," என்று கூறினார்.

சிவிடிஐ(கன்டினியூவஸ் வேரியபிள் டைமிங் இக்னிஷன்) தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் புதிய ஸ்டார் சிட்டி அதிக மைலேஜ் தரும் பைக் என்ற பெருமையை பெற்றிருப்பதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், புதிய ஸ்டார் சிட்டி லிட்டருக்கு 83.9 கிமீ மைலேஜ் கொடு்ப்பதாகவும் ஏஆர்ஏஐ சான்றளித்துள்ளது.

5 ஆண்டுகள் வாரண்டியுடன் வரும் புதிய ஸ்டார் சிட்டியின் பேஸ் மாடல் ரூ.38,650 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
Country's leading two wheeler maker Tvs motors company has launched upgraded version Star City in India today. The new 2012 model star city is available in 6 new dual tone colours. The new star city base model priced at Rs.38,650(Ex.delhi)
Story first published: Tuesday, January 24, 2012, 15:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X