மேற்குவங்கத்தில் உற்பத்தி விரிவாகத்தை மேற்கொள்ளும் டிவிஎஸ்

Tvs King Auto Rickshaw
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் நிறுவனம் மேற்கு வங்கத்தில் உள்ள இருசக்கர வாகன அசெம்பிளிங் ஆலையின் உற்பத்தி திறனை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, அங்கு ரூ.400 கோடியை முதலீடு செய்யவுள்ளது.

மேற்குவங்கத்தை சேர்ந்த மஹாபாரத் ஆட்டோ நிறுவனத்துடன் இருசக்கர வாகனங்களை தயாரிப்பதற்காக டிவிஎஸ் மோட்டார்ஸ் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்த கூட்டு குழுமம் சார்பில் மஹாபாரத் ஆலையில் ஆண்டுக்கு 1,600 இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த ஆலையின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 2.4 லட்சம் வாகனங்களாக உயர்த்துவதற்கு டிவிஎஸ் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.400 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, தமிழகம், கர்நாடகம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆலை அமைத்து இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை டிவிஎஸ் மோட்டார்ஸ் உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
The leading Two wheeler maker Tvs motors to invest Rs.400 crores in West Bengal by next three years. The investment will utilize ramp up for its two wheeler production to 2.4 lakhs per year from 1,600 units now.
Story first published: Tuesday, January 17, 2012, 15:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X