டிவிஎஸ் ஹைபிரிட் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் பற்றிய ஒரு பார்வை

TVS Qube Hybrid Scooter
இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட தனது க்யூப் ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார்ஸ் வரும் ஜூன் மாதம் சோதனை ரீதியில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. மார்க்கெட்டில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த ஆண்டு இந்த ஸ்கூட்டரை வர்த்தக ரீதியில் டிவிஎஸ் அறிமுகம் செய்ய தி்ட்டமிட்டுள்ளது.

சாதாரண பவர் ஸ்கூட்டர்களை ஒப்பிடும்போது இந்த ஹைபிரிட் ஸ்கூட்டர் இரட்டிப்பு மைலேஜ் வழங்கும் என்று டிவிஎஸ் தெரிவித்துள்ளது. பெரும் ஆவலை ஏற்படுத்தும் அம்சங்களுடன் வரும் க்யூப் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை காணலாம்.

110 சிசி ஃபோர் ஸ்ட்ரோக் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் க்யூப் லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தரும் என்று டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

மேலும், பிரேக் பிடிக்கும்போது ஆற்றலை சேகரித்து பேட்டரியில் சேமிக்கும் தொழில்நுட்பத்தை க்யூப் கொண்டுள்ளது. தவிர, இதிலுள்ள ஸ்டாப்/ஸ்டார்ட் தொழில்நுட்பமும் சிக்னல்களில் நிற்கும்போது ஆற்றல் விரயமாவதை தவிர்க்கும்.

க்யூப் ஸ்கூட்டரில் செல்லும்போது சார்ஜ் குறைவாக இருந்தால் அதை எகானமி மோடில் மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. இதில் மொத்தம் மூன்று மோடுகளில் செல்லும் வசதியையும் வழங்கும்.

இதில், நவீன லித்தியம் அயான் பேட்டரியை கொண்டிருப்பதால் சுலபமாக சார்ஜ செய்யவும், அதிக ஆற்றலை சேமிக்கும் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கும்.

இந்த புதிய ஸ்கூட்டரை வரும் ஜூன் மாதம் சோதனை அடிப்படையில் விற்பனைக்கு கொண்டு வர டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது. மொத்தம் 200 க்யூப் ஹைபிரிட் ஸ்கூட்டர்கள் மட்டும் விற்பனைக்கு வருகிறது.

மார்க்கெட்டில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த ஆண்டு இந்த ஹைபிரிட் ஸ்கூட்டரை வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்ய டிவிஎஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

ரூ.60,000 முதல் ரூ.70,000 விலையில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
TVS Qube from June 2012 and plans to initially test market 200 scooters before its commercial launch in 2013.The TVS Qube has two sources of power, including a 100cc four-stroke engine and an electric hub motor. The rider has the option to choose from a range of modes, depending on his or her requirement. This hybrid system charges the battery (lithium ion) when the brakes are applied and utilizes this power whenever required, therefore making the most efficient use of the energy available.
Story first published: Friday, January 13, 2012, 18:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X