ஆண்களுக்கான பிரத்யேக ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் யமஹா

நம் நாட்டு ஸ்கூட்டர் மார்க்கெட் அதீத வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை வகித்து வரும் யமஹா ஸ்கூட்டர் மார்க்கெட்டிலும் இறங்கியிருக்கிறது. கடந்த செப்டம்பரில் பெண்களுக்கான பிரத்யேக அம்சங்களை கொண்ட ரே என்ற புதிய ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த புதிய ஸ்கூட்டர் ஓரளவு நல்ல விற்பனையை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்ததாக ஆண்களுக்கான பிரத்யேக அம்சங்கள் கொண்ட ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் யமஹா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹிரோயுகி சுஸுகி கூறியிருக்கிறார். இந்த புதிய ஸ்கூட்டரின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

ஆண்களுக்கான ஸ்கூட்டர் என்பதால் பிற ஸ்கூட்டர் மாடல்களைவிட சற்று வித்தியாசமாகவும், கூடுதல் எடை கொண்டதாகவும் இருக்கும் என தெரிகிறது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ப முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய யமஹா ஸ்கூட்டர் சிங்கிள் சிலிண்டர் 125 சிசி திறன் கொண்ட ஃபோர்ஸ்ட்ரோக் எஞ்சினுடன் வர இருக்கிறது. சிவிடி டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கும்.

 விலை

விலை

ரூ.40,000 முதல் ரூ.50,000க்கும் இடைப்பட்ட ஆரம்ப விலையில் புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக யமஹா இந்தியா நிர்வாக இயக்குனர் ஹிரோயுகி சுஸுகி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எந்த மாடல் வருகிறது

எந்த மாடல் வருகிறது

ஸியோன் 125 ஸ்கூட்டரை யமஹா அறிமுகப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

அடுத்த ஆண்டு இந்த புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஹிரோயுகி சுஸுகி தெரிவித்தார். ஆனால், எந்த மாதத்தில் அறிமுகமாகும் என்பது குறித்து குறிப்பிட்டு கூறவில்லை.

Most Read Articles
மேலும்... #yamaha #two wheeler #யமஹா
English summary
Japanese two wheeler giant Yamaha had entered the Indian scooter market by launching the 110cc Ray scooter which was aimed at women. Yamaha is planning to add another scooter to its line up and this new model will be targeted at men.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X