டிஸ்க் பிரேக், புதிய வசதிகளுடன் வெஸ்பா ஸ்கூட்டர்!

டிஸ்க் பிரேக், கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய வெஸ்பா ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெஸ்பா எல்எக்ஸ் 125 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கூட்டரில் கூடுதல் அம்சங்களுடன் தற்போது 2013 மாடலாக வெஸ்பா 'விஎக்ஸ்' 125 என்ற பெயரில் புதிய வேரியண்ட்டாக விற்பனைக்கு வருகிறது.

ஏற்கனவே இருக்கும் எல்எக்ஸ் 125 வேரியண்ட் பேஸ் மாடலாக விற்பனை செய்யப்படும். வரும் 20ந் தேதி இந்த புதிய ஸ்கூட்டரின் விலையை பியாஜியோ நிறுவனம் அறிவிக்கிறது. எல்எக்ஸ் வேரியண்ட்டை விட புதிய விஎக்ஸ் 125 வேரியண்ட் ரூ.10,000 வரை கூடுதலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

வெஸ்பா விஎக்ஸ் 125 வேரியண்ட்டில் 200மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் எம்ஆர்எஃப் நைலோக்ரிப் ஸாப்பர் டயர்கள் நிரந்தர அம்சங்களாக இருக்கும்.

பீஜ் சீட் கவர்

பீஜ் சீட் கவர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மாற்றம் கண்டுள்ளது. பீஜ் சீட் கவர் ஆப்ஷனலாக கிடைக்கும்.

 கிராப் ரெயில்

கிராப் ரெயில்

பின் இருக்கையையொட்டி பொருத்தப்பட்டிருக்கும் கிராப் ரெயில் கூடுதல் நீளம் கொண்டதாக இருப்பதுடன் குரோம் பூச்சுடன் மிளிர்கிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

புதிதாக இளஞ்சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெரூன் மற்றும் கருப்பு வண்ணங்களை நிறுத்துவதற்கு பியாஜியோ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Most Read Articles

English summary
The 2013 Vespa VX125 was revealed yesterday, without disclosing the price. The new variant will be launched on June 20th, when the price will be revealed. The new VX variant will be sold alongside the LX model, which will now be considered the base variant.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X