மேம்படுத்தப்பட்ட கவாஸாகி நின்ஜா 400 அறிமுகம் - விபரங்கள்

By Saravana

2014 மாடல் கவாஸாகி நின்ஜா 400 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

பஜாஜ் - கேடிஎம் கூட்டணியில் டியூக் 390 பைக் தற்போது விற்பனையில் இருக்கிறது. இதற்கு இணையான இந்த பைக்கை பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்த புதிய பைக்கின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய நின்ஜா 400 பைக்கில் 8 வால்வுகள் கொண்ட 399சிசி பேரலல் ட்வின் ப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்

பவர்

இந்த எஞ்சின் 44 பிஎஸ் பவரையும், 37 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

தோற்றம்

தோற்றம்

இருக்கையை தவிர பொதுவான தோற்றத்தில் நின்ஜா 650ஆர் பைக்காகவே காட்சியளிக்கிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

மெட்டாலிக் மூன்டஸ்ட் கிரே, மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக், கேண்டி பர்ன்ட் ஆரஞ்ச் மற்றும் நின்ஜா குடும்பத்தின் பாரம்பரிய வண்ணமான பச்சை மற்றும் கருப்பு நிற கலவையில் கிடைக்கும்.

ஏபிஎஸ் மாடல்

ஏபிஎஸ் மாடல்

இந்த பச்சை, கருப்பு வண்ண கலவை கொண்ட மாடல் ஏபிஎஸ் பிரேக்குடன் லிமிடேட் எடிசன் மாடலாக வரும்.

எடை

எடை

ஏபிஎஸ் பிரேக் கொண்ட மாடல் 211 கிலோ எடை கொண்டது.

விலை

விலை

இந்திய மதிப்பில் பேஸ் மாடல் நின்ஜா 400 ரூ.4,08,400 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் ரூ.4.20 லட்சம் முதல் ரூ.4.52 லட்சம் விலை வரையில் வந்துள்ளது.

Most Read Articles
English summary
Japanese premium bike maker Kawasaki has unveiled its 2014 version of the Ninja 400.
Story first published: Monday, November 4, 2013, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X