பெங்களூரில் ஹோண்டா டிரிக்கர் விற்பனைக்கு வந்தது: சிறப்பம்சங்கள் விபரம்

பெங்களூரில் ஹோண்டாவின் புதிய 150சிசி பைக்கான சிபி-டிரிக்கர் விற்பனைக்கு வந்துள்ளது. பெங்களூர், ஃபோரம் வணிக வளாகத்தில் நடந்த விழாவில் இந்த புதிய பைக்கை ஹோண்டாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு துணைத் தலைவர் குலேரியா அறிமுகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்," இந்த ஆண்டில் எங்களது 4வது புதிய மாடலாக இந்த பைக் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இளைஞர்களை கவரும் அம்சங்கள் நிரம்பியதாக இந்த பைக் இருக்கும்.

இந்திய மார்க்கெட்டில் முன்னிலை பெறும் வகையில், இந்த ஆண்டில் இன்னும் பல புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறோம். மேலும், பெங்களூரில் இருசக்கர வாகன மார்க்கெட்டில் நாங்கள்தான் விற்பனையில் நம்பர்-1 என்பதையும் பெருமைபட தெரிவிக்கிறேன்," என்றார். மூன்று வேரியண்ட்களில் வந்திருக்கும் சிபி-டிரிக்கர் பல புதிய அம்சங்களுடன் 150சிசி பிரிவில் பிரிமியம் பைக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கடும் போட்டி நிறைந்த 150சிசி பிரிவில் வந்திருக்கும் சிபி-டிரிக்கர் பைக்கில் இருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

சிபி 1000ஆர் பைக்கின் அடிப்படையில் அதிலிருக்கும் அம்சங்களுடன் இந்த புதிய 150சிசி பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு நிற புகைபோக்கி குழாய், பக்கவாட்டு கவுல்கள் மற்றும் கம்பீரமான பெட்ரோல் டேங்க் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர்

டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர்

ஷைன், யூனிகார்ன் உள்ளிட்ட பைக்குகளில் டிஜிட்டல் டிஸ்ப்ளே இல்லாதது குறையாக இருந்து வருவதை போக்கும் விதத்தில் இந்த பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் முழுவதும் டிஜிட்டல் திரை கொண்டதாக இருக்கிறது.

 சிபிஎஸ் டிஸ்க் பிரேக்

சிபிஎஸ் டிஸ்க் பிரேக்

ஹோண்டாவின் ஸ்கூட்டர்களில் இருக்கும் சிபிஎஸ் எனப்படும் கோம்பி பிரேக்கிங் சிஸ்டம் முதல்முறையாக இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 150சிசி எஞ்சின் 14 எச்பி ஆற்றலையும், 12.5 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

 மைலேஜ்

மைலேஜ்

ஹோண்டா சிபி-டிரிக்கர் லிட்டர் பெட்ரோலுக்கு 60 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஹோண்டா நடத்திய நடைமுறை சோதனையில் சாத்தியப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

மெட்டியர் கிரீன் மெட்டாலிக், பியர்ல் சியனா, கருப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

சொகுசு

சொகுசு

அகலமான இருக்கை பொருத்தப்பட்டிருப்பதால், குறைந்த தூர மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். முழுவதுமாக மூடப்பட்ட செயின் கார்டு, கிக் ஸ்டார்ட், ஃபுல் கியர் லிவர் ஆகியவையும் இந்திய சாலை நிலவரங்கள் மற்றும் போக்குவரத்துக்கு ஏற்றதாக இருக்கும்.

 டியூப்லெஸ் டயர்

டியூப்லெஸ் டயர்

டியூப்லெஸ் டயர், பராமரிப்பு தேவையற்ற பேட்டரி, விஸ்காஸ் ஏர் ஃபில்டர் உள்ளிட்ட ஹோண்டாவின் தயாரிப்புகளுக்கு உரிய பிரத்யேக அம்சங்கள் இந்த பைக்கிலும் உண்டு.

வேரியண்ட்கள்

வேரியண்ட்கள்

இந்த பைக் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் முன்பக்கம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் கொண்டதாக இருக்கும். இரண்டாவது, டீலக்ஸ் வேரியண்ட்டில், முன்புறம், பின்புறம் டிஸ்க் பிரேக் கொண்டதாக இருக்கும். மூன்றாவது வேரியண்ட்டான சிவிஎஸ் வேரியண்ட்டில் முன்புறம், பின்புறம் டிஸ்க் பிரேக்குடன் கோம்பி பிரேக்கிங் சிஸ்டத்துடன் கிடைக்கும்.

 முன்பதிவு

முன்பதிவு

கடந்த 13ந் தேதி முதல் இந்த புதிய பைக்குக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

ஸ்டான்டர்டு: ரூ.70.733

டீலக்ஸ் : ரூ.73,786

சிபிஎஸ் : ரூ.80,402

Most Read Articles
English summary
Honda Motorcycle & Scooter India launched its premium 150cc bike, the CB Trigger, for Karnataka, in Forum Mall, Bangalore during the weekend. Honda CB Trigger, available in the following three variants.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X