புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்!

By Saravana

இத்தாலி, மிலன் நகரில் நடந்து வரும் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்தியா வருகை தரும் பல புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் ஹோண்டாவின் புதிய சிபிஆர் 300ஆர் பைக்கும் இணைந்துள்ளது.

அடுத்த ஆண்டு இந்தியா வர இருக்கும் இந்த புதிய பைக்கின் முழு விபரங்களையும் ஹோண்டா வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் சிபிஆர் 250ஆர் பைக்குக்கு மாற்றாக சிபிஆர் 300ஆர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஆனால், இந்தியாவில் சிபிஆர் 250ஆர் மற்றும் சிபிஆர் 300ஆர் ஆகிய இரண்டு பைக் மாடல்களும் சேர்த்தே விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

 டிசைன்

டிசைன்

ஹோண்டா சிபிஆர் 100ஆர் பைக்கின் பல டிசைன் தாத்பரியங்கள் இந்த பைக்கிலும் கையாளப்பட்டுள்ளன. இரட்டை ஹெட்லைட்டுகள், புதிய டிசைன் கொண்ட புகைப்போக்கி குழாய் ஆகியவை சிபிஆர் 300ஆர் பைக்கின் டிசைனின் முக்கிய அம்சங்களாக கூறலாம்.

எஞ்சின்

எஞ்சின்

கூடுதல் பவர் மற்றும் சிசி திறன் கொண்டதாக ட்யூனிங் செய்யப்பட்ட 286சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

பவர்

பவர்

புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் பைக்கின் எஞ்சின் 30.4 எச்பி ஆற்றலையும், 27 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். சிபிஆர் 250ஆர் பைக்கின் எஞ்சின் 26 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

எரிபொருள் செலுத்தும் அமைப்பு

எரிபொருள் செலுத்தும் அமைப்பு

டிஜிட்டல் ப்யூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்தில் எரிபொருள் செலுத்தப்படுவதால் எஞ்சின் ரெஸ்பான்ஸ் மிகத் துல்லியமாக இருக்கும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

சிபிஆர் 300ஆர் பைக்கில் 12.87 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 389 கிமீ தூரம் செல்ல முடியும் என்கிறது ஹோண்டா. அதாவது, லிட்டருக்கு சராசரியாக 30 கிமீ மைலேஜ் தரும் என்கிறது ஹோண்டா.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் 37மிமீ நீளம் கொண்ட டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்புறத்தில் புரோ லிங்க் மோனோஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிரேக்

பிரேக்

முன்புறத்தில் ட்வின் பிஸ்டன் காலிபர் கொண்ட 296மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிபர் கொண்ட 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

இருக்கை

இருக்கை

முன்புறத்தில் ட்வின் பிஸ்டன் காலிபர் கொண்ட 296மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிபர் கொண்ட 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

 ஏபிஎஸ் பிரேக்

ஏபிஎஸ் பிரேக்

ஐரோப்பிய மார்க்கெட்டில் ஏபிஎஸ் பிரேக் கட்டாயம் என்பதால் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும். பிற மார்க்கெட்டுகளில் ஆப்ஷனலாக கிடைக்கும். விலை விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Most Read Articles
English summary
Honda did reveal to us the 2014 CBR300R, the possible successor to the CBR250R at the CIMAMotor show in China. The bike has once again been revealed for its European customers at the EICMA, but this time with full engine specifications and other details.
Story first published: Thursday, November 7, 2013, 11:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X