புனேயில் புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கை பார்வைக்கு வைத்த கவாஸாகி!

By Saravana

இந்திய மார்க்கெட்டில் ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக் மாடல்களை அறிமுகம் செய்வதில் கவாஸாகி படு தீவிரமாக இறங்கியுள்ளது. சூப்பர் பைக்குகளுக்காக புனேயில் தனியாக ஷோரூம் திறந்துள்ள அந்த நிறுவனம் இசட்எக்ஸ் 10ஆர் மற்றும் இசட்எக்ஸ் 14ஆர் ஆகிய உயர் ரக மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு கொண்டு வந்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது இசட்800 என்ற புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கை புனே ஷோரூமில் தற்போது பார்வைக்கு வைத்துள்ளது. 806சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த பைக் 113 பிஎஸ் பவரையும், 83 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

Kawasaki Z800

பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர், முன்புறத்தில் 310மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக், பின்புறத்தில் 250 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும். இந்த புதிய பைக் அடுத்த மாத இறுதியில் அல்லது ஜனவரி துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் ஏற்கனவே தெரிவித்திருந்த இசட்1000 நேக்டு ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் பைக்குடன் சேர்த்து இந்த புதிய பைக்கையும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு கவாஸாகி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கவாஸாகி இசட் 800 பைக் ரூ.10 லட்சத்திற்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Most Read Articles
English summary

 Kawasaki is on the offensive in India. The Japanese sports bike manufacturer from Japan which recently launched its flagship superbikes, Ninja ZX-10R and Ninja ZX-14R is expected to soon introduce the newly launched Z1000 liter class naked sports bike in India.
Story first published: Saturday, November 30, 2013, 9:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X