2015ல் கேடிஎம் டியூக் 690 பைக் அறிமுகம்: சிஇஓ., தகவல்!

கேடிஎம் டியூக் 690 ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கேடிஎம் தெரிவித்துள்ளது. பஜாஜ் ஆட்டோவின் கூட்டணி நிறுவனமான கேடிஎம் இந்திய மார்க்கெட்டில் மிகவும் வெற்றிகரமான பிராண்டாக மாறியுள்ளது.

டியூக் 200 மூலம் குறுகிய காலத்தில் மார்க்கெட்டை பிடித்த அந்த நிறுவனம் அடுத்துக் கொண்டு வந்த டியூக் 390 பைக்கும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. டிசைன், எஞ்சின் மற்றும் சரியான விலை ஆகியவை கேடிஎம் பைக்குகளுக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

இந்த நிலையில், கேடிஎம் நிறுவனம் பல புதிய மாடல்களை அடுத்தடுத்து இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய பைக் அறிமுகத்தை கேடிஎம் சிஇஓ., ஸ்டீபன் பியரர் உறுதிப்படுத்தியுள்ளார்.

 புதிய பிளாட்ஃபார்ம்

புதிய பிளாட்ஃபார்ம்

கேடிஎம் டியூக் 200 மற்றும் டியூக் 390 பைக்குககள் ஒரே பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்படுகின்றன. பல முக்கிய பாகங்களை இரு மாடல்களும் பகிர்ந்து கொண்டுள்ளன. ஆனால், புதிய டியூக் 690 பைக் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்ட மாடல். எஞ்சின் உள்ளிட்ட அனைத்தும் இதில் முற்றிலும் புதிதானது.

எஞ்சின் திறன்

எஞ்சின் திறன்

கேடிஎம் டியூக் 690 பைக்கில் 69 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வல்லமை கொண்ட 690சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைந்து செயல்புரியும்.

 இலகு எடை பைக்

இலகு எடை பைக்

சக்திவாய்ந்த இந்த பைக் வெறும் 149.5 கிலோ மட்டுமே எடை கொண்டதாக இருக்கும்.

ஏபிஎஸ் நிரந்தரம்

ஏபிஎஸ் நிரந்தரம்

பாஷ் நிறுவனத்தின் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இந்த பைக்கில் நிரந்தர அம்சமாக இடம் பெற்றிருக்கும்.

அசெம்பிள்

அசெம்பிள்

டியக் 200 மற்றும் டியூக் 390 பைக்குகள் பஜாஜ் ஆட்டோவின் சகன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், அதே உற்பத்தி பிரிவில் இந்த பைக்கை உற்பத்தி செய்ய இயலாது என்பதால், முக்கிய பாகங்களை இறக்குமதி செய்து அசெம்பிள் செய்து விற்பனை செய்ய கேடிஎம் திட்டமிட்டுள்ளது.

ஏற்றுமதி

ஏற்றுமதி

சகன் ஆலையில் அசெம்பிள் செய்யப்படும் கேடிஎம் டியூக் 690 பைக்கை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய பஜாஜ் - கேடிஎம் கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மிக சவாலான விலையில் இந்த புதிய பைக்கையும் விற்பனைக்கு வரும் என்று கருதப்படுகிறது.

Most Read Articles

English summary
Sparked by the success of the 200 Duke and 390 Duke in India and abroad the company has decided to introduce the more premium 690 Duke in the country. Speaking at a press conference in New Delhi today KTM CEO Stefan Pierer informed the media that 690 Duke has been planned for a 2015 launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X