இந்தியாவில் விற்பனைக்கு வரும் கேடிஎம் டியூக் -1290 சூப்பர் பைக்!

டியூக் 390 ஸ்போர்ட்ஸ் பைக்கை யாரும் எதிர்பாராத விலையில் அறிமுகப்படுத்தி, ஜப்பானிய மோட்டார்சைக்கிள் நிறுவனங்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது கேடிஎம்- பஜாஜ் கூட்டணி. இதுதவிர, புதிய பைக் மாடல்களையும் அடுத்தடுத்து இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளதால் பல ஜப்பானிய நிறுவனங்களுக்கு இப்போதே கைகால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நிலையில், டியூக் 1290 என்ற புதிய சூப்பர் பைக் மாடலை சர்வதேச அளவில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்த இருப்பதாக கேடிஎம் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத் தலைவர் பிலிப் ஹாப்ஸ்பர்க் சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ஐரோப்பிய மார்க்கெட்டில் 15,000 யூரோ விலையில் இந்த புதிய சூப்பர் பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய சூப்பர் பைக்கை இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய சூப்பர் பைக் தவிர அடுத்ததாக டியூக் 690 மற்றும் டியூக் 990 ஆகிய மாடல்களையும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. அதேவேளை, டியூக் 125 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதை தவிர்க்க கேடிஎம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

கான்செப்ட் நிலை

கான்செப்ட் நிலை

கடந்த ஆண்டு கான்செப்ட் நிலையில் கேடிஎம் டியூக் 1290 சூப்பர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை, உற்பத்தி நிலை மாடலை கேடிஎம் வெளியிடவில்லை.

எஞ்சின்

எஞ்சின்

கேடிஎம் டியூக் 1290 பைக்கில் 1195 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சினஅ 200 எச்பி சக்தியை வெளிப்படுத்தும்.

இந்தியாவில் அசெம்பிள்

இந்தியாவில் அசெம்பிள்

அடுத்ததாக இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய திட்டமிடப்பட்டிருக்கும் பைக் மாடல் இது.

 எஞ்சின்

எஞ்சின்

நேற்றுமுன்தினம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டியூக் 390 பைக்கின் எடையும், இந்த புதிய பைக்கின் எடையும் ஒன்றாக இருக்கும். ஆனால், இதன் எஞ்சின் 70 எச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

கேடிஎம் பவர்ஃபுல் மாடல்

கேடிஎம் பவர்ஃபுல் மாடல்

தற்போது கேடிஎம் நிறுவனத்தின் உற்பத்தி நிலையில் இருக்கும் அதிக சக்தி கொண்ட சூப்பர் பைக் மாடல் இதுதான்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 123 எச்பி சக்தியை வாரி வழங்கும்.

Most Read Articles

மேலும்... #ktm #two wheeler #கேடிஎம்
English summary
KTM R&D Head, Mr Philipp Habsburg has confirmed that the Super Duke 1290 will be launched internationally this year. In Europe it will be priced at approximately 15,000 euros. Taking that into account, we expect the Super Duke 1290 to be launched in here in India by the end of this year, if not early next year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X