ஜூலை 1ல் புதுமையான வசதிகளுடன் மஹிந்திரா செஞ்சூரோ அறிமுகம்!

இருசக்கர வாகன மார்க்கெட்டில் முதன்முறையாக பல புதிய வசதிகளுடன் கூடிய செஞ்சூரோ பிரிமியம் பைக்கை வரும் 1ந் தேதி விற்பனைக்கு கொண்டு வருகிறது மஹிந்திரா. 110சிசி எஞ்சினுடன் வரும் மஹிந்திரா செஞ்சூரோ டிஸ்கவர் 100டி, ஹீரோ பேஷன் ப்ரோ உள்ளிட்ட பைக்குகளுடன் போட்டி போடும்.

வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் அம்சங்கள் கொண்ட இந்த புதிய பைக்கில் எண்ணற்ற வசதிகள் மற்றும் சவாலான விலையில் இந்த புதிய பைக்கை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

8.5 எச்பி சக்தியையும், 8.5 என்எம் டார்க்கையும் வழங்கும் எம்சிஐ-5 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

பைன்ட் மீ லேம்ப்

பைன்ட் மீ லேம்ப்

செஞ்சூரோவின் டாப் வேரியண்ட்டில் பார்க்கிங் பகுதியில் நிறுத்தியிருக்கும்போது, வண்டி எங்கு நிற்கிறது என்பதை எளிதாக கண்டுபிடிக்கும் வசதி கொண்ட Find me Lamps வசதி இருக்கிறது.

கெய்டு மீ ஹோம் லேம்ப்

கெய்டு மீ ஹோம் லேம்ப்

இரவில் வண்டியை நிறுத்தியவுடன் சிறிது நேரம் ஒளி தரும் Guide me Home lamps இருக்கிறது.

டிஜிட்டல் மயம்

டிஜிட்டல் மயம்

முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ரிமோட் சாவி

ரிமோட் சாவி

கார்களில் இருப்து போன்று ரிமோட் சாவி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை அலாரம்

எச்சரிக்கை அலாரம்

திருட்டு போவதை தடுக்கும் விதத்தில் ஆன்ட்டி தெஃப்ட் அலாரமும், எஞ்சின் இம்மொபைலைசர் வசதியும் இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

இந்த பைக் லிட்டருக்கு 85.4 கிமீ மைலேஜ் செல்லும் என அராய் சான்றளித்துள்ளது.

5 ஆண்டு வாரண்டி

5 ஆண்டு வாரண்டி

ஸ்டாலியோ பைக்கில் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக வாடிக்கையாளர் மத்தியில் மஹிந்திரா இருசக்கர வாகனங்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் அவநம்பிக்கையை போக்கும் விதத்திலும், ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனத்தின் 5 வாரண்டி திட்டத்தை எதிர்கொள்ளும் விதத்திலும் தனது செஞ்சூரோவுக்கு 5 வாரண்டி வழங்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

 விலை

விலை

110சிசி செக்மென்ட்டில் கடும் போட்டி நிலவுவதால், போட்டியாளர்களுக்கு சவால் கொடுக்கும் விதத்தில் இந்த புதிய பைக்கின் விலையை மஹிந்திரா அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Mahindra 2 wheelers company is all set to launch Centuro premium commuter bike on July 1st.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X