ராயல் என்ஃபீல்டு கஃபே ரேஸர் நாளை ரிலீஸ்... அதுவரை இந்த வீடியோ ஓகே.,வா?

By Saravana

கோவாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிள் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து, நடைபெறும் டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சியில் டிரைவ்ஸ்பார்க் தளமும் பங்கு கொண்டு, அந்த மோட்டார்சைக்கிளின் சாதக, பாதக அம்சங்களை வாசகர்களுக்கு வழங்க இருக்கிறது.

Royal Enfield Continental GT

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கஃபே ரேஸர் ரகத்தில் வடிவமைத்துள்ள இந்த புதிய பைக் செப்டம்பரில் இங்கிலாந்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்திய மதிப்பில் ரூ.5.2 லட்சம் விலையில் அங்கு விற்பனைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மிக இலகு எடைகொண்ட, அதிசக்திவாய்ந்த ராயல் என்ஃபீல்டு தயாரிப்பாக வரும் இந்த புதிய மோட்டார்சைக்கிள் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் விலையில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய மோட்டார்சைக்கிள் மீது ஆவல் கொண்டு நாளை வரை காத்திருக்க முடியவில்லை என்று தவிப்பவர்களுக்காக கீழே ஒரு காணொளியை வழங்கியுள்ளோம்.

<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/2QKTBdigs5M?rel=0" frameborder="0" allowfullscreen></iframe></center>

Most Read Articles

English summary
Royal Enfield Continental GT will make its debut in India tomorrow. That's Tuesday, November 26th. The Chennai based motorcycle manufacturer launched the Continental GT in the U.K in early September where it's priced at £5,200 or around INR 5.2 lakhs.&#13;
Story first published: Monday, November 25, 2013, 17:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X