பஜாஜ் ஆலையில் ஸ்ட்ரைக்... டியூக் 390 டெலிவிரி தாமதமாகும்!!

By Saravana
KTM Duke 390
மஹாராஷ்டிர மாநிலம், சகனில் உள்ள பஜாஜ் ஆட்டோ ஆலையில் தொழிலாளர் வேலை நிறுத்தப்போராட்டம் நடந்து வருவதால், கேடிஎம் டியூக் 390 பைக்கின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பைக்கின் டெலிவிரி தாமதம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை கேடிஎம் டியூக் 390 பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கேடிஎம் டியூக் 200 பைக்கின் நம்பகத்தன்மை, ஸ்டைல் போன்றவற்றால் கேடிஎம் பிராண்டு மீது வாடிக்கையாளர்களிடம் தனி மதிப்பு இருக்கிறது.

எனவே, கேடிஎம் டியூக் 390 பைக்குக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரூ.30,000 முன்பணத்துடன் டீலர்களில் முன்பதிவு நடந்து வருகிறது. இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோவின் சகன் ஆலையில் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

இதனால், கேடிஎம் டியூக்390 பைக்கின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், காத்திருப்பு காலம் 3 மாதங்களுக்கு மேல் நீளும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான டீலர்களில் டெஸ்ட் டிரைவ் வண்டி இல்லை என்று கூறப்படுகிறது. இது வாடிக்கையாளர் மத்தியில் முகச் சுளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலை நிறுத்தப்போராட்டம் நடந்து வரும் ஆலையில்தான் கவாஸாகி நின்ஜா, பல்சர் 200என்எஸ், கேடிஎம் பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary

 Demand for the newly released KTM Duke 390 was recognized well before the bike launched. Thousands are expected to ditch their existing rides, including Duke 200 owners. Bookings for the 390 began the day after the launch, but a few dealers had in fact started accepting bookings much before. While waiting periods are not uncommon for products with high demand, in this case it could turn out to be a crisis due to an ongoing workers' strike at Bajaj's Chakan plant.
Story first published: Friday, June 28, 2013, 17:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X