உலகின் சவால் நிறைந்த டக்கார் ராலியில் பங்கேற்கும் முதல் இந்தியர் சந்தோஷ்!

Posted By:

உலகிலேயே அதிக சவால்கள் நிறைந்தாக கருதப்படும் டக்கார் ராலியில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பிரபல பைக் பந்தய வீரர் சிஎஸ்.சந்தோஷ் பெற இருக்கிறார்.

கடந்த இரு ஆண்டுகளாக கடுமையான முயற்சிகள் மற்றும் பந்தயங்களில் பெற்ற வெற்றிகள் மூலம் டக்கார் ராலியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் பெற்றிருக்கிறார். இதுகுறித்து, இன்று சிஎஸ்.சந்தோஷிடம் தொலைபேசியில் பேசினோம். அப்போது, டக்கார் ராலியில் பங்கேற்க இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி தருவதாக தெரிவித்தார். மேலும் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தோம்.

டக்கார் ராலியில் பங்கேற்பது குறித்த சிஎஸ்.சந்தோஷ் வழங்கிய கூடுதல் தகவல்கள் மற்றும் டக்கார் ராலி குறித்த சில விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 சிறந்த வீரர்

சிறந்த வீரர்

மோட்டோகிராஸ், சூப்பர்கிராஸ், டர்ட் டிராக் மற்றும் ராலி பந்தயங்கள் என எந்தவகை பைக் பந்தயங்களிலும் சிஎஸ். சந்தோஷ் இந்தியாவின் சிறந்த வீரராக தன்னை முத்திரை பதித்து வருகிறார். இந்தியாவின் மிக கடினமான ராலி பந்தயங்களில் ஒன்றான ரெய்ட் டி இமாலயா பந்தயத்தில் பங்கேற்ற முதல் முறையிலேயே சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றவர்.

விபத்து

விபத்து

கடந்த ஆண்டு அபுதாபியில் நடந்த டிசெர்ட் சேலஞ்ச் பந்தயத்தில், பைக் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், சிஎஸ்.சந்தோஷ் பலத்த காயமடைந்தார். துபாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டும் பைக் பந்தயங்களுக்கு திரும்பினார். 31 வயதாகும் சந்தோஷை மீண்டும் பைக் பந்தயங்களில் பங்கேற்க வேண்டாம் என்று நண்பர்களும், சொந்தங்களும் அறிவுறுத்தியும், மீண்டும் பந்தய களத்திற்கு திரும்பினார். அதற்கு கைமேல் பலன்....

 டாப்- 10 பட்டியலில்...

டாப்- 10 பட்டியலில்...

தீக்காயங்களிலிருந்து மீண்டு வந்த சிஎஸ்.சந்தோஷ் இந்த ஆண்டு மீண்டும் பந்தய களத்திற்கு திரும்பினார். வேர்ல்டு கிராஸ் கன்ட்ரி ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற சிஎஸ்.சந்தோஷ், உ வேர்ல்டு கிராஸ் கன்ட்ரி ராலி சாம்பியன்ஷிப் போட்டி 6 சுற்றுகளாக நடக்கிறது. பெரும்பாலான வீரர்கள் 5 சுற்றுகளில் பங்கேற்பது வழக்கம். ஏனெனில், இதற்கான செலவீனம் மிக அதிகம். ஆனால், 3 சுற்றுகளில் மட்டுமே பங்கேற்ற சிஎஸ்.சந்தோஷ் உலகின் 9வது சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். அதுதான் அவரை டக்கார் ராலிக்கு செல்வதற்கும் வழிகோலியுள்ளது.

டக்கார் அழைப்பு

டக்கார் அழைப்பு

வேர்ல்டு கிராஸ்கன்ட்ரி ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் 9வது சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்ற சந்தோஷுக்கு டக்கார் ராலியில் பங்கேற்குமாறு, அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. டக்கார் ராலியில் அவ்வளவு சீக்கிரமாக யாரும் நுழைய முடியாது என்பதுடன், அதற்கு மனவலிமையும், உடல் வலிமையும் மிக அதிகம் தேவைப்படும். இதுவும் ஒரு பெருமைக்குரிய விஷயமே.

தில் இருக்கா...!!

தில் இருக்கா...!!

உலகின் அதிக சவால் நிறைந்த இந்த மோட்டார் பந்தயத்தை அமாரி ஸ்போர்ட் அமைப்பு ஏற்பாடு செய்து நடத்துகிறது. திக்கு தெரியாத பாலைவனப் பகுதியில், பல்வேறு சவால்கள் நிறைந்த இந்த போட்டியில் பங்கேற்பது பல மோட்டார் பந்தய வீரர்களுக்கு கனவாக இருக்கிறது.

2015 டக்கார் ராலி

2015 டக்கார் ராலி

தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சில நாடுகளில் 2015 ஜனவரி 5 முதல் 20 வரை டக்கார் ராலி பந்தயம் நடைபெற இருக்கிறது.

 தட்டிக் கொடுத்த ஜாம்பவான்

தட்டிக் கொடுத்த ஜாம்பவான்

சிஎஸ்.சந்தோஷின் திறமை பார்த்து, டக்கார் ராலியின் சிறந்த வீரராக புகழப்பெறும் மார்க் கோமா, தட்டிக் கொடுத்ததுடன், டக்கார் ராலி பந்தயத்திற்கான தகுதிகள் இருப்பதாக தட்டிக் கொடுத்துள்ளார். அதுவும் டக்கார் ராலி மீதான ஆர்வத்தை சந்தோஷ் மனதில் கூட்டியிருக்கிறது.

 ஸ்பான்சர்

ஸ்பான்சர்

டக்கார் ராலியில் பங்கேற்பதற்கான செலவீனத்தை எஸ்.பாலன் குழுமம் வழங்குவதாகவும், பயிற்சி மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பு உதவிகளை கினி ரெட்புல் நிறுவனம் வழங்குவதாகவும் சந்தோஷ் தெரிவித்தார்.

பைக் மாடல்

பைக் மாடல்

2015 டக்கார் ராலி பந்தயத்தில் கேடிஎம் 450 ராலி மோட்டார்சைக்கிளை பயன்படுத்த இருக்கிறார்.

 வாழ்த்துகிறோம்

வாழ்த்துகிறோம்

டக்கார் ராலியில் வெற்றி பெறுவதற்கு சிஎஸ்.சந்தோஷை டிரைவ்ஸ்பார்க் தளம் வாழ்த்துகிறது.

சவால் நிறைந்த பைக் பந்தயங்கள்

சவால் நிறைந்த பைக் பந்தயங்கள்

உலகின் சவால் நிறைந்த டாப்- 10 மோட்டார் பந்தயங்கள் பற்றிய செய்தித்தொகுப்பிற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

 
English summary
CS Santosh will be the first Indian to participate in the prestigious Dakar Rally, sponsored by PB Racing of the S Balan Group, Red Bull announced today.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark