ஹார்லி டேவிட்சனின் புதிய எலக்ட்ரிக் பைக்கின் தொழில்நுட்ப விபரங்கள்!

By Saravana

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக் அறிமுகம் குறித்த தகவல்களை நேற்று வெளியிட்டிருந்தோம். இந்த புதிய எலக்ட்ரிக் பைக்கின் தொழில்நுட்ப விபரங்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

லைவ்வயர் என்ற பெயரிலான இந்த எலக்ட்ரிக் பைக்கை தயாரிப்பு திட்டத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு முன், பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டறிய ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டுள்ளது. இதற்காக, அமெரிக்காவில் 30 நகரங்களிலும், தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பை ஹார்லி டேவிட்சன் வழங்க உள்ளது.

இந்த பைக்கை ஓட்டிப் பார்ப்பவர்கள் தெரிவிக்கும் மதிப்பு கருத்துக்களின் அடிப்படையில் இந்த எலக்ட்ரிக் பைக்கில் சில மாறுதல்களை செய்து தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்ல ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டுள்ளது.


புராஜெக்ட் லைவ்வயர்

புராஜெக்ட் லைவ்வயர்

லைவ்வயர் என்ற பெயரிலான இந்த எலக்ட்ரிக் பைக் திட்டத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பைக்கின் தொழில்நுட்ப விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

மின் மோட்டார்

மின் மோட்டார்

லைவ்வயர் திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் பைக்கில் 55 kW திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 115 கிலோ எடை கொண்ட லித்தியம் அயான் பேட்டரி 85 கிமீ தொலைவு செல்வதற்கு மின்சாரத்தை வழங்கும்.

 மோட்டார் பவர்

மோட்டார் பவர்

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார் 74 எச்பி சக்தியையும், 70 என்எம் டார்க்கையும் வழங்கும். பிரம்மோ எம்பல்ஸ் ஆர் மற்றும் ஸீரோ எலக்ட்ரிக் பைக்குகளைவிட அதிக பவர் கொண்டதாக இருந்தாலும், அவற்றைவிட குறைவான டார்க்கை வழங்கும். பேட்டரியின் ரேஞ்ச்சும் குறைவுதான்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0- 60 கிமீ வேகத்தை 4 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்ட இந்த புதிய எலக்ட்ரிக் பைக் மணிக்கு 150 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

 சார்ஜ் நேரம்

சார்ஜ் நேரம்

பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆவதற்கு 3.5 மணி நேரம் பிடிக்கும். ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் என்ற ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பமும் உள்ளது.

விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

இந்த லைவ்வயர் திட்டத்தில் வடிவமைக்கப்படும் இந்த முதல் ஹார்லி டேவிட்சன் எலக்ட்ரிக் பைக் 2016ம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary

 Harley Davidson's first electric motorcycle, the LiveWire, has made its official debut and we have our first official details about the motorcycle. It is now confirmed that the LiveWire is not a production model, but a pre-production model that will be used to gauge people's reaction for the next year or so.
Story first published: Friday, June 20, 2014, 12:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X