ஜனவரி முதல் கர்நாடகா முழுவதும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகிறது!

By Saravana

ஜனவரி முதல் வாரத்திலிருந்து கர்நாடக மாநிலம் முழுவதும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட உள்ளது.

கர்நாடகாவில், பெருநகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை கருத்தில்கொண்டு, கர்நாடக மாநிலம் முழுவதும் இருசக்கர வாகனங்களில் செல்வோர்க்கு ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட உள்ளது.

Helmet Rule

இதுகுறித்து கர்நாடக மாநில போக்குவரத்து துறை ஆணையர் ராமேகவுடா கூறுகையில்," ஜனவரி முதல் வாரத்தில் கர்நாடகாவில் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது.

அப்போதிலிருந்து, மாநிலம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெருநகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் செல்லும்போது பின்னால் அமர்ந்து செல்வோர்க்கும் ஹெல்மெட் அணிந்து செல்வதும் கட்டாயமாக்கப்பட உள்ளது.

இந்த புதிய விதிமுறைக்கான வழிகாட்டுமுறைகளை மத்திய அரசிடமிருந்து பெற்றுவிட்டோம். மேலும், ஹெல்மெட் அணியாமல் செல்லுபவர்களுக்கான அபாரதத் தொகையிலும் மாறுதல்களை செய்ய இருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

Most Read Articles
English summary
The Karnataka State Transport Department has made it compulsory that two-wheeler riders must wear a helmet, whether riding in city limits or outside, across Karnataka.
Story first published: Tuesday, December 23, 2014, 10:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X