யமஹாவுக்கு போட்டியாக குறைவான விலை பைக்: ஹோண்டா திட்டம்

Written By:

இந்திய மார்க்கெட்டுக்காக குறைவான விலையில் புதிய பைக் மாடலை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிற்காக, உலகின் மிக குறைவான விலை பைக் மாடலை தயாரித்து வருவதாக யமஹா நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலையில், யமஹா பைக் மாடலுக்கு போட்டியை தரும் வகையில், ஹோண்டாவும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

Honda Dream Neo
 

இந்தியாவில் இந்த புதிய பைக் மாடலை தயாரிக்கவும் ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. 600 டாலர் விலையில், இந்திய மதிப்பில் ரூ.38,000 விலையில் புதிய பைக்கை அறிமுகம் செய்யவும் ஹோண்டா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அடுத்த ஆண்டு 10 புதிய பைக் மாடல்களையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், தனது ராக்கெட் வேக வளர்ச்சியை இந்தியாவில் தக்க வைத்துக் கொள்ள அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

English summary

 Honda Motorcycles and Scooters India (HMSI) is planning on a low cost motorcycle, specially designed for the Indian market. 
Story first published: Friday, December 19, 2014, 13:50 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark