ஹோண்டா மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் 'போடியம்' ஏறிய சரத்குமார்!

Posted By:

ஹோண்டா ஆசிய கோப்பை ரோடு ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னையை சேர்ந்த சரத்குமார் முதலிடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார்.

ஆசிய அளவிலான இந்த போட்டியில் போடியம் ஏறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சரத்குமார் பெற்றிருக்கிறார். ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான், இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, சீனா, பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 18 வீரர்கள் இந்த மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்றனர்.

Sarathkumar
 

மொத்தம் 6 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியின் இறுதிச் சுற்று கத்தார் லோசியல் சர்வதேச சர்க்யூட்டில் நடந்தது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் சரத்குமார் முதலிடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார்.

பல்வேறு கஸ்டமைஸ் ஆப்ஷன்கள் மற்றும் மாறுதல்களுடன் கூடிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கை பயன்படுத்தினார். சரத்குமார் உள்பட இந்தியா சார்பில் பங்கேற்ற மூன்று வீரர்களுக்கு ஹோண்டா நிறுவனம் ஸ்பான்சர் செய்திருந்தது.

ஹோண்டா ஆசிய ரோடு ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்த சரத்குமாருக்கு ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

English summary
Once again Honda has nurtured Indian talent to realize their dreams at world platform. Honda sponsored Indian motorcycle professional racer S Sarath Kumar today become the first Indian racer to clinch podium victory in the Honda Asia Dream Cup Road Racing Championship 2014. Becoming the first Indian rider to win podium position, an excited Sarath received the trophy while wrapped in the Indian tri-colour.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark