ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் நின்ஜா 300 பைக்: கவாஸாகி திட்டம்

Written By:

ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களில் கவாஸாகி நின்ஜா 300 சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

ஆரம்ப நிலை மாடல்களில் விலை அதிகமான மாடலும் கூட. இருப்பினும், ஸ்டைல், பெர்ஃபார்மென்ஸ் போன்றவை விலையை மறக்கடிக்கச் செய்கிறது.

 

ஆனால், இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இல்லை என்பது நின்ஜா 300 பிரியர்களின் ஆதங்கமாக இருந்தது. இதனை போக்கும் விதத்தில், விரைவில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் நின்ஜா 300 பைக்கை அறிமுகம் செய்ய கவாஸாகி முடிவு செய்துள்ளது.

ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை கூடுதலான விலையில் ஏபிஎஸ் சிஸ்டம் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

கவாஸாகி நின்ஜா 300 பைக்கில் 39 பிஎஸ் பவரையும், 27 என்எம் டார்க்கையும் வழங்கும் 296சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

English summary
According to reports, Kawasaki is planning to introduce ABS brake system in the Ninja 300 by next year.
Story first published: Tuesday, December 30, 2014, 11:13 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos