இந்தியாவில் கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது!

Written By:

ரூ.10 லட்சம் முன்பணத்துடன், இந்தியாவில் புதிய கவாஸாகி நின்ஜா எச்2 ஹைப்பர் பைக்கிற்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இந்திய மார்க்கெட்டிற்கு அதிக முக்கியத்துவத்தை கவாஸாகி நிறுவனம் வழங்கி வருவது தெரிந்ததெ. கடந்த ஓர் ஆண்டில் பல புதிய உயர்வகை பைக் மாடல்களை இந்தியாவில் தொடர்ந்து களமிறக்கி வருகிறது.

இந்த நிலையில், உலக அளவில் மோட்டார்சைக்கிள் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் கவாஸாகியின் புதிய ஹைப்பர் பைக்கான நின்ஜா எச்2வையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இதற்காக, தற்போது கவாஸாகி டீலர்ஷிப்புகளில் நின்ஜா எச்2 பைக்கிற்கு முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்படுகிறது. விலை உள்ளிட்ட கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய ஹைப்பர் பைக்

புதிய ஹைப்பர் பைக்

நின்ஜா எச்2ஆர் ரேஸ் டிராக் வெர்ஷனின் சாதாரண சாலைகளில் செல்லத்தக்க மாடல்தான் இந்த நின்ஜா எச்2 பைக். உலகின் முக்கிய மார்க்கெட்டுகளில் குறைந்த எண்ணிக்கையிலான பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்து, அதன் மூலம் இந்த பைக்கிற்கான வரவேற்பை தெரிந்துகொள்ள கவாஸாகி பிரியப்படுகிறது. அந்த குறிப்பிட்ட மார்க்கெட்டுகளில் ஒன்றாக இந்தியாவும் இடம்பெற்றிருக்கிறது.

முதல் லாட்...

முதல் லாட்...

இந்தியாவுக்காக முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் 5 பைக்குகளில் 4 பைக்கிற்கு முன்பதிவு முடிந்துவிட்டதாம். கடைசி பைக்கிற்கும் இன்றுக்குள் முன்பதிவு செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கில் 10,000ஆர்பிஎம்.,மில் 140.4 என்எம் டார்க்கை அளிக்கும் 4 சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ரேஸ் டிராஸ் வெர்ஷன் 300 எச்பி பவரை அளிக்கும் என்று கூறப்படும் நிலையில், இந்த ஸ்ட்ரீட் வெர்ஷன் 200எச்பி பவரை வழங்கும். இது 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

குயிக்ஷிஃப்டர்

குயிக்ஷிஃப்டர்

இந்த பைக்கின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று குயிக்ஷிஃப்டர் வசதி. பெரும்பாலும் ரேஸ் பைக்குகளில் தரப்படும் இந்த குயிக்ஷிஃப்டர் வசதி மூலம், கியரை மாற்றுவதற்கு கிளட்ச் மற்றும் ஆக்சிலேட்டரை தொடாமல் நேரடியாக மாற்ற முடியும்.

விலை

விலை

ரூ.32 லட்சம் மும்பை ஆன்ரோடு விலையில் இந்த புதிய கவாஸாகி ஹைப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

 
English summary
Kawasaki dealers are accepting bookings for new Ninja H2 hyperbike in India.
Story first published: Friday, December 26, 2014, 11:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark