ரூ.3 கோடிக்கு ஏலம் போன 'விண்டேஜ்' மோட்டார்சைக்கிள்!

Posted By:

விண்டேஜ் மோட்டார்சைக்கிள் சேகரிப்பாளர்களின் மத்தியில் புரோஃப் சுப்பீரியர் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல்கள் வெகு பிரசித்தம். இருசக்கர வாகனங்களின் ரோல்ஸ்ராய்ஸ் என்று வர்ணிக்கப்படும் இந்த மோட்டார்சைக்கிள்களுக்கு பெரும் மதிப்பு இருக்கிறது.

1919 முதல் 1949ம் ஆண்டுகளுக்கு இடையில் மொத்தம் 3,048 மோட்டார்சைக்கிள்களை புரோஃப் சுப்பீரியர் தயாரித்து விற்பை செய்தது. இந்தநிலையில், தற்போது வெகு குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இந்த மோட்டார்சைக்கிள்கள் உள்ளன. இதனால், இந்த பிராண்டின் மோட்டார்சைக்கிள்களுக்கு சேகரிப்பாளர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருக்கிறது.

Vintage Motorcycle
 

இதனால், இந்த மோட்டார்சைக்கிள்கள் ஏல நிறுவனங்கள் மத்தியிலும் பெரும் மதிப்பு மதிப்பு இருக்கிறது. கடந்த 2012ம் ஆண்டு ரூ.2.82 கோடி மதிப்பில் ஒரு புரோஃப் சுப்பீரியர் மோட்டார்சைக்கிள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், லண்டனில் நடந்த ஏல நிகழ்ச்சியில் 1929ம் ஆண்டு எஸ்எஸ்100 அல்பைன் கிராண்ட் ஸ்போர்ட்ஸ் என்ற புரோஃப் சுப்பீரியர் மோட்டார்சைக்கிள் மாடல் ரூ.3 கோடிக்கு ஏலம் போய் வியக்க வைத்துள்ளது. டூரர் வகையை சார்ந்த இந்த மோட்டார்சைக்கிள் மாடலில் மொத்தமே 383 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.

Brough Motorcycle
 

வி- ட்வின் 1000 எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த மோட்டார்சைக்கிளுக்கு ஏராளமான கஸ்டமைஸ் வசதிகளை புரோஃப் சுப்பீரியர் நிறுவனம் வழங்கியது. இதனால், மோட்டார்சைக்கிள் பிரியர்கள் மத்தியில் இந்த பிராண்டுக்கு பெரும் வரவேற்பும், மதிப்பும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary

 Brough Superior motorcycles have dominated the auction arena's as people are willing to pay exuberant amounts for them. In 2012 an Individual purchased a Brough Superior SS80 for INR 2,82,76,733. Now this record of being the most expensive motorcycle in an auction has been crushed.
Story first published: Thursday, December 11, 2014, 12:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark