புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 'ஸ்போர்ட்' பைக்... டைகர்வுட்ஸ் அறிமுகம் செய்தார்!

ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கின் ஸ்போர்ட் என்ற புதிய மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சர்வதேச விளம்பர தூதர் டைகர் வுட்ஸ் அறிமுகம் செய்தார்.

சர்வதேச அளவில் வர்த்தகத்தை கொண்டு செல்வதற்காக அமெரிக்காவை சேர்ந்த பிரபல கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் வுட்சை விளம்பர தூதராக நியமித்திருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகளை பிரபலப்படுத்துவதற்கு டைகர் வுட்ஸ் துணை புரிவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Hero Xtreme Sport
 

இந்தநிலையில், அமெரிக்காவில் நடந்த ஜிபிஏ கோல்ஃப் பந்தயத்தின்போது நடந்த நிகழ்ச்சியில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கின் ஸ்போர்ட் என்ற புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹீரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால், விளம்பர தூதர் டைகர் வுட்ஸ் உள்பட போட்டியில் பங்கேற்ற 18 வீரர்கள் கலந்து கொண்டனர்.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஹீரோ எக்ஸ்ட்ரீம் மாடலின் டிசைன் மற்றும் எஞ்சினில் சில மாற்றங்களை செய்துள்ளனர். நேக்டு ஸ்டைலிலான ஹெட்லைட் மற்றும் பக்கவாட்டு டிசைன் கொண்ட இந்த பைக்கில் 15.2 பிஎச்பி பவரை அளிக்கும் 149.2 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஸ்டெப்டு இருக்கைகள் கொண்ட இந்த பைக்கில் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இந்தியாவிலும் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 சதவீதம் தள்ளுபடியுன் மெட்ஸீலர் டயர்கள்!

Most Read Articles

English summary
Hero MotoCorp revealed to the audience present their Xtreme Sport motorcycle with their global ambassador. The motorcycle was showcased in the presence of Zach Johnson, defending champion. Also present where the top 18 players of the PGA Tour, who stood a chance to win USD 3.5 million in prize money.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X