நவம்பர் விற்பனையில் இந்தியாவின் டாப் -10 இருசக்கர வாகனங்கள்!

நடப்பு ஆண்டு மோட்டார்சைக்கிளுக்கான ஆண்டாக குறிப்பிடப்படுகிறது. இதர வாகனங்களைவிட மக்களின் மிகச் சிறந்த போக்குவரத்து சாதனமாக மாறியிருக்கும், மோட்டார்சைக்கிள்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்று வருகிறது.

இதன் காரணமாக புதிய மாடல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அனைத்து சந்தைப் போட்டிகளையும் கடந்து, கடந்த மாதம் விற்பனையில் டாப் - 10 இடங்களில் இருந்த மோட்டார்சைக்கிள்களின் பட்டியலை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.


பட்டியல்

பட்டியல்

அக்டோபர் விற்பனையையும் , நவம்பர் விற்பனையையும் ஒப்பீடு செய்து இந்த செய்தித் தொகுப்பை வழங்கியுள்ளோம். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் இந்தியாவின் டாப்- 10 இடங்களை பிடித்த மோட்டார்சைக்கிள்களை காணலாம்.

10. பஜாஜ் டிஸ்கவர்

10. பஜாஜ் டிஸ்கவர்

கடந்த மாதம் 10 வது இடத்தில் பஜாஜ் டிஸ்கவர் இடம்பெற்றிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் 70,461 டிஸ்கவர் பைக்குகள் விற்பனையாகி டாப் - 10 பட்டியலில் 7வது இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த மாதம் 42,317 டிஸ்கவர் பைக்குகள் மட்டுமே விற்பனையாகியதால், 10வது இடத்துக்கு டிஸ்கவர் தள்ளப்பட்டுள்ளது.

9. பஜாஜ் பல்சர்

9. பஜாஜ் பல்சர்

பல்சர் வரிசையில் விற்பனை செய்யப்படும் அனைத்து மாடல்களின் விற்பனையையும் உள்ளடக்கிய இந்த பல்சர் பிராண்டில் 48,361 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. அக்டோபர் மாதத்தில் 70,763 பைக்குகள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் விற்பனை வெகுவாக சரிந்தது. இதனால், அக்டோபரில் 6வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது பஜாஜ் பல்சர்.

 8.ஹீரோ கிளாமர்

8.ஹீரோ கிளாமர்

டாப்- 10 பட்டியலில் 8வது இடத்தில் ஹீரோ கிளாமர் பைக் இருக்கிறது. கடந்த மாதம் 52,807 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. அக்டோபரில் விற்பனை சோபிக்காததால், டாப்- 10 பட்டியலில் இல்லாத இந்த பைக் கடந்த மாதம் டாப்- 10 பட்டியலுக்குள் வந்துள்ளது.

7. ஹோண்டா ட்ரீம்

7. ஹோண்டா ட்ரீம்

அக்டோபரில் 5வது இடத்தில் இருந்த ஹோண்டா ட்ரீம் பைக் மாடல்கள் 7வது இடத்துக்கு தள்ளப்பட்டன. கடந்த அக்டோபரில் 73,010 ட்ரீம் பைக்குகள் விற்பனையாகிய நிலையில், கடந்த மாதம் 56,414 ட்ரீம் வரிசையிலான பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

6.டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

6.டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

டாப் - 10 பட்டியலில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொபட் மாடலான எக்ஸ்எல் சூப்பர் இடம்பெற்றிருக்கிறது. மேலும், ஆறாவது இடத்தை பிடித்தும் பல முன்னணி பைக் மாடல்களுக்கு சவால் விட்டு வருகிறது இந்த மொபட் மாடல். அக்டோபரில் 69,066 எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனையாகி 8வது இடத்தில் இருந்தது. ஆனால், நவம்பரில் விற்பனை 61,630 ஆக குறைந்தபோதிலும், இரு இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்தது.

 5. ஹோண்டா சிபி ஷைன்

5. ஹோண்டா சிபி ஷைன்

இந்தியாவின் சிறந்த 125சிசி பைக் மாடல் என்ற நன்மதிப்பை பெற்றிருக்கும் சிபி ஷைன் 40+ வயதினரின் விருப்பமான மாடலாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் 64,115 ஷைன் பைக்குகள் விற்பனையாகி 9வது இடத்தில் இருந்த ஷைன், கடந்த மாதம் 66,648 பைக்குகள் விற்பனையாகி 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

 4. ஹீரோ பேஸன்

4. ஹீரோ பேஸன்

அக்டோபரில் 1,02,866 ஹீரோ பேஸன் பைக்குகள் விற்பனையாகி டாப்- 10 பட்டியலில் 3வது இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த மாதம் 92,434 பேஸன் பைக்குகள் விற்பனையாகி 4வது இடத்தை பிடித்துள்ளது.

3. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்

3. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்

டாப் -10 பட்டியலில் அக்டோபரில் 4வது இடத்தில் இருந்த ஹீரோ டீலக்ஸ் பைக் நவம்பரில் 3வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. கடந்த அக்டோபரில் 1,01,799 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகி நிலையில், கடந்த மாதம் 97,299 பைக்குகள் விற்பனையாகியுள்ளது. இருப்பினும், ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

 2. ஹோண்டா ஆக்டிவா

2. ஹோண்டா ஆக்டிவா

கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாத விற்பனையின்படி, டாப் - 10 பட்டியலில் 2வது இடத்தில் ஹோண்டா ஆக்டிவா இருக்கிறது. அக்டோபரில் 1,76,087 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 1,91,175 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.

 1. ஹீரோ ஸ்பிளென்டர்

1. ஹீரோ ஸ்பிளென்டர்

நம்பர்- 1 இடத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் இருக்கிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் என இருமாதங்களிலும் ஸ்பிளென்டருக்கு முதல் இடம். கடந்த அக்டோபரில் 2,21,084 ஸ்பிளென்டர் பைக்குகளும், கடந்த மாதம் 2,04,919 ஸ்பிளென்டர் பைக்குகளும் விற்பனையாகியிருந்தன. இந்த மாதம் எந்த மாடல் முதலிடம் பிடிக்கிறது என்பதை ஜனவரி விற்பனை புள்ளிவிபரங்களுடன் பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Sales of these motorcycles being in thousands, lets take a look at top 10 motorcycles that have been sold in November 2014, compared to those sold in October 2014, along with their sales numbers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X