முக்கிய மாற்றங்களுடன் 2016 கேடிஎம் ஆர்சி390 பைக் அறிமுகம் - விபரம்!

Written By:

இத்தாலியிலுள்ள மிலன் நகரில் நடந்து வரும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், முக்கிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் கேடிஎம் ஆர்சி390 ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

விரைவில் அமலுக்கு வர இருக்கும் யூரோ- 4 மாசு அளவு விதிகளுக்குட்பட்ட மாடலாக மேம்படுத்தப்பட்டிருக்கும், இந்த புதிய கேடிஎம் ஆர்சி390 பைக்கில் செய்யப்பட்டிருக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் வசதிகள் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஸ்லிப்பர் க்ளட்ச்

ஸ்லிப்பர் க்ளட்ச்

கேடிஎம் ட்யூக் 390 பைக்கை தொடர்ந்து கேடிஎம் ஆர்சி 390 பைக்கிலும் ஸ்லிப்பர் க்ளட்ச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக, டவுன்ஷிஃப் செய்வது மிக எளிதாகும் என்பதோடு, டவுன்ஷிஃப்ட் செய்யும்போது சக்கர சுழற்சியில் திடீர் தடை ஏற்படுவதையும் தவிர்க்கும்.

 ரைடு பை ஒயர் சிஸ்டம்

ரைடு பை ஒயர் சிஸ்டம்

ரைடு பை ஒயர் என்ற நவீன தொழில்நுட்பமும் புதிய ஆர்சி 390 பைக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறது. எஞ்சின் பவர் வெளிப்படுத்தும் திறனை சீராக வைத்திருப்பதோடு, கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும் இந்த புதிய தொழில்நுட்பமும் பெற முடியும்.

பிரேக், சஸ்பென்ஷன்

பிரேக், சஸ்பென்ஷன்

கேடிஎம் ஆர்சி390 பைக்கில் முன்புறத்தில் 320மிமீ விட்டம் கொண்ட புதிய பிரெம்போ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தை அணைத்து வைத்துக் கொள்ளும் வசதியும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

அட்ஜெட்டபிள் லிவர்

அட்ஜெட்டபிள் லிவர்

பிரேக் லிவர் மற்றும் கிளட்ச் லிவரை தேவைக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதியும் இந்த புதிய கேடிஎம் ஆர்சி390 மாடலில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, பின்னால் வரும் வாகனங்களை தெளிவாக காட்டும் விதத்தில் பெரிய அளவிலான புதிய சைடு மிரர்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய புகைப்போக்கி

புதிய புகைப்போக்கி

யூரோ- 4 மாசு அளவு விதிகளுக்கு ஏற்ப புதிய புகைப்போக்கி அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 373சிசி எஞ்சின் 44 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

அறிமுகம்

அறிமுகம்

2016ம் ஆண்டு மாடலாக வரும் இந்த புதிய கேடிஎம் ஆர்சி390 பைக் மாடல் வரும் பிப்ரவரியில் நடக்க இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

 
English summary
KTM unveiled the RC 390 at EICMA* and the 2016 model has received a few upgrades.
Story first published: Thursday, November 19, 2015, 10:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark