அலாய் வீல் உடைந்து விபத்தில் சிக்கிய பல்சர் ஆர்எஸ்200 பைக்!

Posted By:

பஜாஜ் ஆட்டோவுக்கு ஒரு நெருக்கடியான செய்தி வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் ஆர்எஸ்200 பைக் பெரும் விபத்தில் சிக்கியிருக்கிறது. அதன் முன்புற அலாய் வீல் பிரேக் போட்ட போது நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த மோசின் பட்டேல் என்பவர் சமீபத்தில் புதிய பல்சர் ஆர்எஸ்200 பைக்கை வாங்கியிருக்கிறார். சில தினங்களுக்கு தனது மனைவியுடன் பயணிக்கையில், அவரது பல்சர் பைக்கின் முன்புற அலாய் வீல் நொறுங்கி விபத்தில் சிக்கியிருக்கின்றனர். இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த செய்தி பல்சர் ஆர்எஸ்200 வாடிக்கையாளர்களிடத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பஜாஜ் விளக்கம்

பஜாஜ் விளக்கம்

இந்த விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை தொடர்பு கொண்டுள்ளதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. விபத்து குறித்து அவரிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆய்வு

ஆய்வு

சம்பந்தப்பட்ட பைக்கின் முன்புற அலாய் வீல் உடைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சாதாரண சாலை மற்றும் பந்தய களங்கள் என இரண்டிலும் பொருந்தும் தரமான அலாய் வீல்கள் பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் இருப்பதாகவும் பஜாஜ் கூறியுள்ளது.

தரமான அலாய் வீல்

தரமான அலாய் வீல்

பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் தரமான அலாய் வீல்களும், பி ரகத்தில் தரமதிப்பீடு கொண்ட டயர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு 150 கிமீ வேகத்தில் கூட செல்ல முடியும்.

காரணம்

காரணம்

கடினமான பொருட்கள் அல்லது தடுப்புகள் மீது மோதினால் மட்டுமே அலாய் வீல் உடைவதற்கான அபாயம் உண்டு. ஆனால், சாதாரணமாக நடந்திருப்பதாக கூறப்படுவதால், இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது..

கேடிஎம் பைக்குகளிலும் பிரச்னை

கேடிஎம் பைக்குகளிலும் பிரச்னை

பஜாஜ் ஆட்டோவும், கேடிஎம் நிறுவனமும் தங்களது பல மாடல்களில் ஒரே சப்ளையரிடமிருந்து பல பாகங்களை பெற்று பொருத்துகின்றன. பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் அலாய் வீல் உடைந்தது போன்றே கேடிஎம் டியூக் பைக்குகளின் அலாய் வீல்களிலும் தெறிப்பு விடுவதாக பிரச்னை எழுந்தது நினைவிருக்கலாம்.

 
English summary
Bajaj Auto had promised that it would be soon looking into the alloy wheel failure on a Pulsar RS200 model. Both rider and pillion have undergone serious injuries dues to this incident and are recovering in a hospital.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark