விரைவில் வருகிறது புதிய பஜாஜ் அவென்ஜர் க்ரூஸர் பைக்!

By Saravana

புதிய டிசைன் மற்றும் புதிய எஞ்சினுடன் விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய பஜாஜ் அவென்ஜர் பைக். க்ரூஸர் பைக் மார்க்கெட்டில் மிக விலை குறைவான மாடல் பஜாஜ் அவென்ஜர் என்பது உங்களுக்கு தெரியும்.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு வருகிறது பஜாஜ் அவென்ஜர் பைக். பட்ஜெட் விலையில் சிறப்பான க்ரூஸர் மாடலான பஜாஜ் அவென்ஜரின் புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதுப்பொலிவு

புதுப்பொலிவு

பட்ஜெட் விலை மாடலாக இருந்தாலும், அதிக குரோமிய பாகங்கள் தற்போது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், புதிய பஜாஜ் அவென்ஜர் மாடலின் டிசைன் நவீன தலைமுறை அம்சங்களுடன் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறதாம். அதாவது, தற்போதைய மாடலுக்கும், புதிய மாடலுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.

புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

தற்போதைய 220சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினுக்கு பதிலாக புதிய 200சிசி எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. அதாவது, பல்சர் என்எஸ் 200 பைக்கில் இருக்கும் அதே எஞ்சினை இந்த புதிய பைக் மாடலுக்கு தகுந்தாற்போல் மாற்றங்களை செய்து பொருத்த இருக்கின்றனர். முதல்முதலில் 200சிசி எஞ்சினுடன்தான் பஜாஜ் அவென்ஜர் விற்பனை செய்யப்பட்டது. 2010ம் ஆண்டு 220சிசி எஞ்சினுடன் வந்தது. இந்தநிலையில், மீண்டும் 200சிசி எஞ்சினுக்கு மாறுகிறது பஜாஜ் அவென்ஜர்.

எஞ்சின் செயல்திறன்

எஞ்சின் செயல்திறன்

புதிதாக பொருத்தப்பட இருக்கும் 200சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 23.5 எச்பி பவரையும், 19 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. புதிய மாடலின் எஞ்சினில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் இருக்குமா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

 அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய பஜாஜ் அவென்ஜர் 200 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பான தேர்வு

சிறப்பான தேர்வு

பைக்கில் நீண்ட தூர பயணங்கள் செய்ய விரும்புவோருக்கான சிறந்த சாய்ஸாக பஜாஜ் அவென்ஜர் இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து தக்க வைக்கும் என்று நம்பலாம்.

க்ரூஸர் பைக் பிரியர்களுக்கான குட் சாய்ஸ்

க்ரூஸர் பைக் பிரியர்களுக்கான குட் சாய்ஸ்

Most Read Articles
English summary
Bajaj Auto is going through a major revamp across their model range. They will be now introducing an all-new Avenger model, which has witnessed little to almost no change. Bajaj designers will provide new design language and will move forward from the previous design drastically.
Story first published: Monday, July 27, 2015, 10:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X