அட்ராசக்கை... முதல் மாதத்திலேயே 25,000 பஜாஜ் அவென்ஜர் பைக்குகள் விற்பனை!

Written By:

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு முதல் மாதத்தில் 25,000 பஜாஜ் அவென்ஜர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இது பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

இருசக்கர வாகனங்களுக்கு சந்தை வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், ஏராளமான மாடல்களில் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யபட்டு கொண்டு இருக்கிறது. அதில், சமீபத்திய வரவான பஜாஜ் அவென்ஜர் பைக்குகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய ரேஞ்ச் மோட்டார்சைக்கிள்கள்;

புதிய ரேஞ்ச் மோட்டார்சைக்கிள்கள்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய குரூஸர் ரேஞ்ச் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.

அவென்ஜர் பைக்கில் ஸ்ட்ரீட் 150, ஸ்ட்ரீட் 220 மற்றும் குரூஸ் 220 ஆகிய மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

அதிகம் விற்பனையாகும் அவென்ஜர் ரேஞ்ஜ்;

அதிகம் விற்பனையாகும் அவென்ஜர் ரேஞ்ஜ்;

அவென்ஜர் ரேஞ்ஜ் வகையில், ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 25,000 மோட்டார்சைக்கிள்கள் விற்கபட்டுள்ளது. மொத்த விற்பனையில், அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 மட்டும் 40 சதவிகிதம் விற்பனையை பதிவு செய்துள்ளது.

குரூஸ் 220 மற்றும் ஸ்ட்ரீட் 220 மோட்டார்சைக்கிள்கள் மீதமுள்ள 60 சதவிகித விற்பனையை பதிவு செய்துள்ளது.

நேரடி போட்டியாளர்கள்;

நேரடி போட்டியாளர்கள்;

தற்போதைய நிலையில், பஜாஜ் அவென்ஜர் ரேஞ்ஜ் மோட்டார்சைக்கிள்களுக்கு நேரடி போட்டியாக எந்த வாகனங்களும் இல்லை.

2016 ஆட்டோ எக்ஸ்போவில் தான், யூஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தங்களின் முதல் குரூஸர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது. அதன் பின் தான், அவென்ஜர் ரேஞ்ஜ் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டி எழ வாய்ப்புகள் உள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், வெகுஜனங்களுக்கு ஏற்ற வகையில் குரூஸர் வகை மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

கூடியுள்ள விற்பனை;

கூடியுள்ள விற்பனை;

முன்னதாக, பஜாஜ் நிறுவனம் 4,000 அவென்ஜர் மோட்டார்சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்து வந்தது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டரான ராஜீவ் பஜாஜ், ஒரு மாதத்திற்கு, 9,000 அவென்ஜர் ரேஞ்ஜ் மோட்டார்சைக்கிள்கள் செய்யபட வேண்டும் விற்பனை இலக்கு நிர்ணயித்துள்ளார்.

புதிய குரூஸர் பைக்குகளின் அறிமுகத்தால், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒட்டு மொத்த விற்பனை கூடியுள்ளது.

புதிய அவென்ஜர் மோட்டார்சைக்கிள்களின் விலைகள்;

புதிய அவென்ஜர் மோட்டார்சைக்கிள்களின் விலைகள்;

அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 - 75,000 ரூபாய்

அவென்ஜர் குரூஸ் 220 - 84,000 ரூபாய்

அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 - 84,000 ரூபாய்

இந்த அனைத்து விலை விவரங்களும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலைகள் என்பது குறிப்பிடதக்கது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மூன்று மாடல்களில் வருகிறது புதிய பஜாஜ் அவென்ஜர்

முதல்முறையாக கேமரா கண்ணில் சிக்கிய புதிய பஜாஜ் அவென்ஜர்

ரூ.75,000 முதல் புதிய பஜாஜ் அவென்ஜர் பைக் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Bajaj Avenger range motorcycles has recorded around 25,000 sales in a single month. Bajaj Auto has launched the all-new range of cruiser motorcycles recently. The Avenger range comprises of three motorcycles, namely the Street 150, Street 220, and the Cruise 220.
Story first published: Wednesday, December 30, 2015, 9:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark