பாக்ஸர் கஃபே ரேஸர்... பஜாஜுக்கு வந்த புது ஆசை...!!

Written By:

அதிக வரவேற்பு இருக்கும் செக்மென்ட்டுகளில் புதிய மாடல்களை களமிறக்குவதில் வாகன நிறுவனங்கள் தீவிரம் காட்டுவது சகஜம். ஆனால், உப்பு சப்பில்லாத விற்பனையை பதிவு செய்து வரும் கஃபே ரேஸர் ரகத்தில் புதிய மாடலை அறிமுகப்படுத்தி இருக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்.

சமீபத்தில் துருக்கியில் நடந்த ஆட்டோ கண்காட்சி ஒன்றில் பாக்ஸர் 150 பைக்கை கஃபே ரேஸர் ஸ்டைலில் மாற்றி காட்சிக்கு வைத்திருந்தது பஜாஜ் ஆட்டோ. விற்பனையில் சோபிக்காமல், சந்தையிலிருந்து விடைபெற்ற பாக்ஸர் 150 பைக்கை இவ்வாறு மாற்றி ஏதாவது தேறுமா என்று சோதித்து பார்க்க பஜாஜ் முடிவு செய்துவிட்டது போலும்.

Bajaj Auto Boxer Cafe Racer
 

ஒற்றை இருக்கை, வட்ட வடிவ முகப்பு விளக்கு, பைக்கின் கீழாக கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்போக்கி குழாய், அலாய் வீல்களுடன் இந்த பைக்கை வடிவமைத்துள்ளனர். துருக்கியை தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்திருக்கிறது. ஆனால், தற்போது உள்ள ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி, ஹீரோ ஸ்பிளென்டர் ப்ரோ கிளாசிக் பைக்குகள் சோபிக்காத நிலையில், இந்த பைக்கிற்கு எந்தளவு வரவேற்பு கிடைக்கும் என்பதை எளிதாக கணித்து விட முடியும்.

English summary
Bajaj Auto has unveiled a cafe racer version of the Boxer 150 at the 2015 Turkey Auto Show recently.
Story first published: Saturday, March 21, 2015, 16:25 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark