இனி ஃப்ளிப்கார்ட் மூலமும் பஜாஜ், கேடிஎம் மற்றும் கவாஸாகி மோட்டார்சைக்கிள்களை வாங்கலாம்

By Ravichandran

பஜாஜ், கேடிஎம் மற்றும் கவாஸாகி உள்ளிட்ட நிறுவனங்களின் மோட்டார்சைக்கிள்களை ஃப்ளிப்கார்ட் வர்த்தக இணையதளம் மூலமாக வாங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பெங்களூரை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை முதலாவதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

வேகமாக வளர்ந்து வரும் இந்திய வாகன சந்தைகளில் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் வாகனங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றனர்.

ஃப்ளிப்கார்ட் மூலம் வாகனம் வாங்குதல்;

ஃப்ளிப்கார்ட் மூலம் வாகனம் வாங்குதல்;

காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப வாகனங்களும், அவற்றை வாங்கும் முறைகளும் மாறி கொண்டே இருக்கின்றது.

தற்போது, ஃப்ளிப்கார்ட் மூலமும் மோட்டார்சைக்கிள்கள் வாங்கும் திட்டம் நடைமுறை படுத்தபட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, தங்களுக்கு பிடித்த வாகனங்களை வாங்க முடியும்.

பெங்களூரூவில் உள்ளவர்களுக்கு மட்டும்;

பெங்களூரூவில் உள்ளவர்களுக்கு மட்டும்;

ஃப்ளிப்கார்ட் மூலம் மோட்டார்சைக்கிள்கள் வாங்கும் இத்திட்டம், தற்போது பெங்களூரூவில் மட்டும் நடைமுறையில் உள்ளது.

பஜாஜ் சிடி100 மாடல் முதல், கவாஸாகியின் ஹெச்2 வரை, இந்த 3 நிறுவனங்களின் அனைத்து மோட்டார்சைக்கிள்களையும் ஃப்ளிப்கார்ட் மூலம் வாங்க முடியும்.

புக்கிங் தொகை;

புக்கிங் தொகை;

வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் இரு சக்கர வாகனங்களை புக்கிங் தொகையான 3,000 ரூபாய் ஆரம்ப கட்டத்தில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.

இதையடுத்து, வாகன புக்கிங் ஏற்று கொள்ளபட்டு அடுத்த கட்ட நடைமுறைகள் துவங்கிவிடும். இந்த கட்டத்தில் புக்கிங் கிளியர் செய்யபட்டு வாடிக்கையாளர்களின் தகவல்கள் டீலர்கள்க்கு தெரிவிக்கபடும்.

டீலர்ஷிப்கள் மேற்கொள்ளும் நடைமுறை;

டீலர்ஷிப்கள் மேற்கொள்ளும் நடைமுறை;

புக்கிங் செய்யபட்ட வாகனத்தை பொருத்து, பஜாஜ் அல்லது கேடிஎம் அல்லது கவாஸாகி டீலர்ஷிப்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வார்கள்.

வாடிக்கையாளர்கள் விருப்பபட்டால், அவர்களுக்கு டீலர்ஷிப்கள் மூலம் டெஸ்ட் டிரைவ் ஏற்பாடு செய்யபடும். பணம் செலுத்துதல், ஆவணமாக்கல் மற்றும் இதர முறைகள், டீலர்ஷிப்கள் மற்றும் வாங்குபவர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்.

டெலிவரி;

டெலிவரி;

இரு சக்கர வாகனங்களின் டெலிவரியானது, இரு சக்கர வாகனங்களின் இருப்பு இருப்பதை பொருத்து மாறுபடலாம்.

இறுதி கட்ட பணம் செலுத்துதல் மட்டும் இதர முறைகள், 8 நாட்களுக்குள் முடிக்கபட வேண்டும். அனைத்து வாகனங்களுக்கான ஆன் - ரோட் விலை விவரங்களையும் ஃப்ளிப்கார்ட் வழங்குகிறது.

ஆன்லைன் ஷாப்பிங்;

ஆன்லைன் ஷாப்பிங்;

இந்தியாவில் ஆன்லைம் மூலம் ஷாப்பிங் செய்யும் மக்களின் வழக்கம் கூடி கொண்டே இருக்கின்றது.

ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள், மக்களின் இந்த வர்த்த்க நடைமுறையின் ஆதாயத்தை அடைய விரும்புகின்றனர்.

முன்னதாக, ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தங்களின் ஆப் மூலம் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனையை துவக்கி இருந்தது. அதன் தொடர்ச்சியாக, இப்போது, ஃப்ளிப்கார்ட் இரு சக்கர வாகனங்களின் விற்பனையையும் துவக்கியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Any Motorcycles under the brands-Bajaj, KTM, and Kawasaki motorcycles are available now through online Shopping Giant Flipkart. But, this option is available for those who are in Bangalore only. All the motorcycles from Bajaj's CT100 model to Kawasaki's H2 motorcycle shall be booked via Flipkart.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X