பல்சர் வரிசையில் அடுத்து ஒரு புதிய 150சிசி பைக் அறிமுகம் - முழு விபரம்!

Posted By:

சரிந்து வரும் விற்பனையை தூக்கி நிறுத்தும் விதமாக புதிய பைக் மாடல்களை பஜாஜ் ஆட்டோ தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் பல்சர் ஆர்எஸ் 200 என்ற மாடலை அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் ரகத்தில் புதிதாக பல்சர் 150 ஏஎஸ் மற்றும் பல்சர் ஏஎஸ் 200 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இரு மாடல்களின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய டிசைன்

புதிய டிசைன்

பல்சர் வரிசையில் புதிய டிசைனில் வந்திருக்கும் இந்த புதிய 150சிசி பைக் சாகசங்களை விரும்பும் இளைஞர்களை மையமாகக் கொண்டு டிசைன் செய்துள்ளனர். பல்சர் ஏஎஸ் 150 மற்றும் பல்சர் ஏஎஸ் 200 ஆகிய இரு மாடல்களிலும் முன்புறத்தில் டூரர் பைக்குகளின் வின்ட் ஸ்கிரீன் மர்றும் ஃபேரிங் பேனல்களை பொருத்தி அட்வென்ச்சர் டூரர் பைக்காக மாற்றியுள்ளனர்.

 கிரவுண்ட் கிளிரயன்ஸ்

கிரவுண்ட் கிளிரயன்ஸ்

அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் என்பதற்கிணங்கி சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸும் கொண்டிருக்கிறது. பல்சர் ஏஎஸ்150 மாடல் 170மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டதாகவும், பல்சர் ஏஎஸ்200 பைக் 167மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய பல்சர் பைக்கில் 17 பிஎஸ் பவரையும், 13 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும் 149.5சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து, புதிய பல்சர் ஏஎஸ் 200 பைக்கில் 23.5 பிஎஸ் பவரை அளிக்கும் 199.5சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் பல்சர் 200என்எஸ் பைக்கில் இருக்கும் அதே எஞ்சின்தான். இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

 முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோஷாக் அப்சார்பர்கள், முன்புறத்தில் டிஸ்க் பிரேக் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

 பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

பல்சர் ஏஎஸ்150 பைக்கில் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. 143 கிலோ எடை கொண்டது.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

இந்த புதிய பைக் மாடல்கள் வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

விலை

விலை

புதிய பஜாஜ் பல்சர் ஏஎஸ்150 பைக் ரூ.79,000 புனே எக்ஸ்ஷோரூம் விலையிலும், பல்சர் ஏஎஸ்200 பைக் ரூ.91,550 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இது அறிமுகச் சலுகை விலையாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
English summary
Bajaj has launched its latest motorcycle, which joins their new range of Pulsar motorbikes. The latest addition is the Pulsar AS150, which is their first adventure motorcycle for beginners.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark