தோற்றத்தில் மிரட்டல், விலையில் அசத்தல்... வந்துவிட்டது புதிய பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200!!

By Saravana

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பல்சர் பிராண்டில் புதிய 200சிசி பைக்கை சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்.

பல்சர் விரும்பிகளின் பல்சை எகிற வைத்திருக்கும் இந்த பைக்கில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன என்பதை ஸ்லைடரில் காணலாம்.

01. இரட்டை ஹெட்லைட்

01. இரட்டை ஹெட்லைட்

புதிய பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் பகல்நேர எல்இடி விளக்குகள், இரட்டை புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 02. எல்இடி டெயில் லைட்

02. எல்இடி டெயில் லைட்

பின்புறத்தில் கிறிஸ்டல் எல்இடி டெயில் லைட்டுகள் புதுமையாகவும், இந்த புதிய பல்சருக்கு தனித்துவத்தையும் கொடுக்கிறது.

03. ஸ்டைலு ஸ்டைலுதான்...

03. ஸ்டைலு ஸ்டைலுதான்...

புதிய பல்சரின் ஃபேரிங் பேனல்கள், வண்ணம், ஒட்டுமொத்த டிசைன் இளைஞர்களை வெகுவாக கவரும்.

04. டிஸ்க் பிரேக்குகள்

04. டிஸ்க் பிரேக்குகள்

முன்புறத்தில் 300மிமீ பட்டர்ஃப்ளை டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. பட்டர்ஃப்ளை டிஸ்க் பிரேக்கின் சிறப்பு, இவை வேகமாக குளிர்ச்சியாவதுடன், சிறப்பான செயல்திறனை வழங்கும்.

05. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

05. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

புதிய பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் ஏபிஎஸ் இல்லாத மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட இரு மாடல்களில் வந்துள்ளது.

06. மீட்டர் கன்சோல்

06. மீட்டர் கன்சோல்

இதன் மீட்டர் கன்சோலில் எஞ்சின் சுழல் வேகத்தை காட்டும் தொடர்முறை சாதனமும், வேக அளவீடு மற்றும் எரிபொருள் அளவுகளை காட்டுவதற்கு மின்னணு திரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

07. அலாய் வீல்கள்

07. அலாய் வீல்கள்

மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட கறுப்பு வண்ண 10 ஸ்போக் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பைக்கின் கவர்ச்சிக்கு உறுதுணை அளிக்கிறது.

 08. எஞ்சின் விபரம்

08. எஞ்சின் விபரம்

புதிய பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் 3 ஸ்பார்க் பிளக்குகள் கொண்ட 199.5சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 24 எச்பி பவரையும், 18.6 என்எம் டார்க்கையும் வழங்கும். இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைந்து செயலாற்றும்.

09. டாப் ஸ்பீடு

09. டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சமாக 141 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10. மைலேஜ்

10. மைலேஜ்

லிட்டருக்கு 54 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11. சஸ்பென்ஷன்

11. சஸ்பென்ஷன்

முன்புறத்தில் சாதாரண வகை டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் சிஸ்டமும், பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோ சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 12. கிரவுண்ட் கிளியரன்ஸ்

12. கிரவுண்ட் கிளியரன்ஸ்

இந்த பைக் 157 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும், 165 கிலோ எடையையும் கொண்டது.

13. வண்ணங்கள்

13. வண்ணங்கள்

சிவப்பு, மஞ்சள் ஆகிய இரண்டு வண்ணங்களில் புதிய பல்சர் ஆர்எஸ்200 பைக் கிடைக்கும்.

14. விலை விபரம்

14. விலை விபரம்

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பேஸ் மாடல்: ரூ.1.18 லட்சம்

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 ஏபிஎஸ் மாடல்: ரூ.1.30 லட்சம்

[அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது]

Most Read Articles
English summary
Let’s take a look at 10 stand out features of the Bajaj Pulsar RS 200, along with its engine specification and pricing:
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X