கருப்பு வண்ணத்தில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200...!!

Written By:

வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும், பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் இப்போது புதிய வண்ணத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் ஃபேர்டு வெர்ஷன் பைக் மாடலான பல்சர் ஆர்எஸ்200 இதுவரை மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Bajaj Pulsar RS200
 

இந்த நிலையில், புதிதாக கருப்பு வண்ண பல்சர் ஆர்எஸ்200 பைக்கும் இப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டெமான் பிளாக் என்ற பெயரில் இந்த புதிய வண்ணம் கிடைக்கும்.

முழுக்க கருப்பாக இல்லாமல், சிவப்பு அலங்காரக் கலவையும் இந்த மாடலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. மேலும், மஞ்சள், சிவப்பு வண்ணங்களைவிட இது மிரட்டலாக இருக்கிறது.

எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. இந்த பைக்கில் இருக்கும் 199.5சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 24 எச்பி பவரையும், 18.6 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.1,30,268 விலையிலும், ஏபிஎஸ் இல்லாத மாடல் ரூ.1,18,500 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

English summary
The Pulsar RS200 will now be available in an all-new Demon Black paint scheme. The fully-faired motorcycle looks even better in the Black and Red colour combination.
Story first published: Tuesday, September 22, 2015, 15:58 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark