பெனெல்லி பைக்குகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு!

Written By:

பெனெல்லி பைக் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இத்தாலியை சேர்ந்த பெனெல்லி நிறுவனம் இந்தியாவை சேர்ந்த டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது உயர்வகை பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

DSK Benelli Bike
 

பெனெல்லி டிஎன்டி 300, டிஎன்டி 600ஐ, டிஎன்டி 600ஜிடி, டிஎன்டி 899 மற்றும் டிஎன்டி ஆர் 1130 ஆகிய 5 மாடல்கள் தற்போது விற்பனையில் இருக்கின்றன. இந்த நிலையில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, இரண்டரை மாதங்களில் இதுவரை 565 பைக்குகளுக்கு முன்பதிவு கிடைத்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெனெல்லியின் டிஎன்டி 300 மாடலுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக பெனெல்லி- டிஎஸ்கே கூட்டணியின் உயரதிகாரி தெரிவித்துள்ளார். இந்த பைக் ரூ.2.83 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இதற்கடுத்து, 600ஐ மற்றும் 600ஜிடி மாடல்களுக்கும் வரவேற்பு இருக்கிறதாம்.

இந்த இரு பைக்குகளும் 4 சிலிண்டர் எஞ்சின் கொண்ட இந்தியாவின் குறைவான விலை மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Benelli Bikes Gets Overwhelming Response In India.
Story first published: Thursday, June 11, 2015, 9:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark