இது பிஎம்டபிள்யூ பைக்தான்... நம்பலையா, உள்ளே வாங்க!!

Written By:

பிஎம்டபிள்யூ மோட்டாராட் பிரிமியம் பைக்குகள் ஸ்டைலில் எப்போதுமே தனித்துவம் பெற்றதாக விளங்குகின்றன. முரட்டுத் தோற்றம், சக்திவாய்ந்த எஞ்சின் என பிஎம்டபிள்யூ மோட்டாராட் பைக்குகள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

இந்த நிலையில், தனது பிராண்டு தனித்துவத்துக்கு மேலும் வலுசேர்க்கும் விதத்தில் எதிர்காலத்துக்கான புதிய பைக் கான்செப்ட் மாடல் ஒன்றை அந்நிறுவனம் உருவாக்கி வெளியிட்டிருக்கிறது. அதிவேகம், வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த நிறுவனம் பிரபல டிசைனர் மெஹ்மெட் டோருக் எர்டெமிடம் இருந்து பெற்ற புதிய அதிவேக பைக் மாடலை பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

 அப்போலோ ஸ்ட்ரீம்லைனர்

அப்போலோ ஸ்ட்ரீம்லைனர்

அதிவேகமானதாகவும், எதிர்காலத்துக்குரிய டிசைனாகவும் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிளை அப்போலோ ஸ்ட்ரீம்லைனர் என பிஎம்டபிள்யூ மோட்டோராட் அழைக்கிறது.

 விசித்திர டிசைன்

விசித்திர டிசைன்

இந்த மோட்டார்சைக்கிள் மிக வித்தியாசமான டிசைனில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பின்புற இருக்கை அமைப்பு, எஞ்சின் பகுதி ஆகியவை பழமை டிசைன் தாத்பரியங்களையும், முன்புறம் காற்றை கிழித்துச் செல்வதற்கான சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டதாகவும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும், முன்புற சக்கரத்தை மூடிய ஃபேரிங் பேனல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 ஸ்போக் வீல்

ஸ்போக் வீல்

பின்புறத்தில் ஸ்போக் வீல் உள்ளது. வானத்தை நோக்கி பிளிரும் வகையிலான புகைப்போக்கி குழாய் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதையெல்லாம் தாண்டி, இதன் அகலமான டயர் இந்த மோட்டார்சைக்கிளுக்கான வலு சேர்க்கிறது.

கான்செப்ட் மாடல்

கான்செப்ட் மாடல்

இந்த மோட்டார்சைக்கிளை உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்லப்படுமா என்பது பற்றி இப்போதைக்கு தகவல் ஏதும் இல்லை. இதனை க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளாக குறிப்பிடப்படுகிறது.

 எப்படியிருக்கு?

எப்படியிருக்கு?

இந்த மோட்டார்சைக்கிள் டிசைன் எப்படியிருக்கிறது? உங்களது கருத்துக்களையும் எழுதலாம்.

 
English summary
German two-wheeler manufacturer BMW Motorrad has showcased to us their Apollo Streamliner motorcycle. This masterpiece of a motorcycle has been designed by Mehmet Doruk Erdem.
Story first published: Monday, April 27, 2015, 10:52 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark