பிஎம்டபிள்யூ - டிவிஎஸ் கூட்டணியின் முதல் பைக் - அதிகாரப்பூர்வ படங்கள், தகவல்கள்

By Saravana

டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியின் முதல் பைக் மாடலின் படங்கள், தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

கடந்த மாதம் பிரேசில் நாட்டில் நடந்த மோட்டார் ஷோவில் இந்த பைக்கின் கான்செப்ட் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் தயாரிப்பு நிலை மாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய பைக் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சின்ன ஃப்ளாஷ்பேக்

சின்ன ஃப்ளாஷ்பேக்

கடந்த 2013ம் ஆண்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்திற்கும் இடையில் கூட்டணி அமைக்கப்பட்டது. 500சிசி ரகத்திற்கும் கீழான ஸ்போர்ட்ஸ் பைக்குகளை தயாரிக்கும் விதத்தில் இந்த கூட்டணி அமைந்தது.

 முதல் பைக்

முதல் பைக்

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கூட்டணியின் முதல் பைக் மாடலாக பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஜெர்மனியின் மூனிச் நகரில் உள்ள பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் டிசைன் ஸ்டூடியோவில் இந்த பைக் மாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.

முதல் 500சிசி பைக்

முதல் 500சிசி பைக்

அதிசக்திவாய்ந்த எஞ்சின்களுடன் பைக் மாடல்களை விற்பனை செய்து வரும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் 500சிசி.,க்கும் குறைவான ரகத்தில் தயாரித்திருக்கும் முதல் பைக் மாடல் இதுதான். முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது நேக்டு ஸ்டைல் ரகத்தை சேர்ந்தது.

எஞ்சின்

எஞ்சின்

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கில் 313சிசி லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 9,500 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில், அதிகபட்சமாக 34 எச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில் அதிகபட்சமாக 28 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சமாக 144 கிமீ வேகத்தை தொடும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

மிகச்சிறந்த எரிபொருள் சிக்கனத்தை தரவல்ல இதன் எஞ்சின் லி்டடருக்கு 36.05 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

 எடை

எடை

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் 158.5 கிலோ எடை கொண்டது.

தோற்றம்

தோற்றம்

மிகச்சிறப்பான தோற்றம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், பிஎம்டபிள்யூவின் வடிவமைப்பு வல்லமைக்கு எடுத்துக்காட்டான மாடலாக இருக்கிறது. மேலும், பிஎம்டபிள்யூ எஸ்1000 ஆர் பைக்கின் டிசைன் சாயல்களை கொண்டிருக்கிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

கருப்பு- சில்வர், வெள்ளை- சில்வர் ஆகிய இரட்டை வண்ணக் கலவையிலும், நீலம், சாம்பல் மற்றும் வெள்ளை ஆகிய ஒற்றை வண்ணங்களிலும் கிடைக்கும்

இருக்கை உயரம்

இருக்கை உயரம்

இந்த பைக்கின் இருக்கை தரையிலிருந்து வெறும் 785மிமீ உயரம் கொண்டதாக இருப்பது அனைவருக்கும் சிறப்பானதாக இருக்கும். மேலும், இதன் இருக்கையை வசதிகேற்ப உயரத்தை அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. முன்புறத்திலும், பின்புறத்திலும் ஒற்றை டிஸ்க் கொண்ட பிரேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் 4 பிஸ்டன் ஃபிக்ஸ்டு காலிபர்கள் கொண்ட 300மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 2 பிஸ்டன் ஃப்ளோட்டிங் காலிபர்களுடன் கூடிய 240மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது.

வசதிகள்

வசதிகள்

வெப்பப்படுத்தும் க்ரிப் கவர்கள், லக்கேஜ் பாக்ஸ், எல்இடி இண்டிகேட்டர்கள் மற்றும் 12 வோல்ட் சார்ஜிங் பாயிண்ட் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று டிவிஎஸ் மோட்டார்ஸ் ஏற்கனவே தெரிவித்துவிட்டது. மேலும், அதிக அளவில் இந்திய சப்ளையர்களிடமிருந்து உதிரிபாகங்களை பெற்று உற்பத்தி செய்யப்பட இருப்பதால், விலையும் மிக சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.3 லட்சம் விலையில் இந்த புதிய பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி வரும்பட்சத்தில், பிஎம்டபிள்யூ பிராண்டில் வரும் இந்த பைக் நிச்சயம் வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
BMW Motorrad unveils the G 310 R motorcycle, which will be made in India. The motorcycle has been designed and developed in Munich, Germany, however, it will be manufactured by TVS Motors in Chennai, India. Recently, BMW Motorrad had showcased a concept version of the similar motorcycle.
Story first published: Thursday, November 12, 2015, 11:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X