ஹீரோ நிறுவனர் ப்ரிஜ்மோஹன் லால் முஞ்ஜால் காலமானார்

By Ravichandran

ஹீரோ மோட்டர்கார்ப் நிறுவனர் ப்ரிஜ்மோஹன் லால் முஞ்ஜால் காலமானார். அவருக்கு வயது 92.

சில நாட்களாக உடல் நல குறைபாடுகளால் புது டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல், அவரது உயிர் பிரிந்தது.

ஜுலை 1, 1923-ஆம் ஆண்டில், பஞ்ஜாபி குடும்பத்தில் தற்போது பாகிஸ்தான் நாட்டில் (சுதந்திரத்திற்கு முன்பு ஒன்றாக இருந்த இந்தியாவில்) உள்ள கமாலியாவில் பிறந்தார்.

Brijmohan Lall Munjal, Hero Group Founder Passed Away

ப்ரிஜ்மோஹன் லால் முஞ்ஜால் தனது தொழிலை சைக்கிள் உபகரணனங்கள் தயாரிப்பதுடன் துவங்கினார். பிறகு ஹீரோ சைக்கிள்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் சைக்கிள் உற்பத்தியில் ஈடுபட்டார். அதனையடுத்து, ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து, இரு சக்கர வாகன சந்தையில் நுழைந்த இவர், மோட்டர்சைக்கிள்களை உருவாக்க துவங்கினார்.

நீண்டகாலம் ஒன்றாக இணைந்து இரு சக்கர வாகனங்கள் தயாரித்த ஹீரோ நிறுவனம், ஹோண்டாவிடம் இருந்து பிரிந்து, தனியாக இரு சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டது. தற்போது, ஹீரோ மோட்டர்கார்ப் நிறுவனம் உலக அளவில் இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னோடியாக திகழ்கிறது.

இந்திய இருசக்கர வாகனத் துறை வளர்ச்சியில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது. ப்ரிஜ்மோஹன் லால் முஞ்ஜால் அவர்களின் வாழ்க்கை பலருக்கு ஊக்கமாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.

Most Read Articles
English summary
Brijmohan Lall Munjal, Hero Group Founder Passed Away. He was 92 years of age. He passed away on Sunday, November 1, 2015, after suffering from body illness. He was very famous for establishing the World's largest Motorcycles company, the Hero Group.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X