டக்கார் ராலியில் முன்னேற்றப் பாதையில் சிஎஸ்.சந்தோஷ்!

Written By:

டக்கார் ராலி பந்தயத்தில் வீரர்கள் தர வரிசையில் இந்தியாவின் சி.எஸ்.சந்தோஷ் சிறிது சிறிதாக முன்னேறி வருகிறார்.

7வது கட்டப் போட்டியில் 65வது இடத்தை பிடித்தார் சி.எஸ்.சந்தோஷ். ஆனால், ஒட்டுமொத்த தர வரிசைப் பட்டியலில் 49வது இடத்தில் இருக்கிறார் சந்தோஷ்.

CS santosh 7stage in Dakar Rally
 

மேலும், 7வது கட்டப் போட்டியில் ஹோண்டா அணியின் பாவ்லோ கான்கல்வ்ஸ் முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடத்தை 4 முறை டக்கார் சாம்பியன் பட்டத்தை வென்றவரான மார்க் கோமா பெற்றார்.

இதனிடையே, டக்கார் ராலியில் முதலிடத்தில் இருந்து வரும் ஜோன் பரேடாவின் பைக் ஹேண்டில்பார் 7வது கட்டப் போட்டியில் இரண்டாக முறிந்தது. இருப்பினும், வலதுபக்க ஹேண்டில்பாரை மட்டும் வைத்துக் கொண்டு 120 கிலோமீட்டர் தூரம் பயணித்து எல்லையை தொட்டார்.

டக்கார் ராலியில் மோட்டார்சைக்கிளில் பிரச்னை ஏற்பட்டால் வீரர்களே அதனை சரிசெய்து கொள்ள வேண்டும். வீரர்கள் அணியின் உதவியை பெற முடியாது. இதனால், மோட்டார்சைக்கிளை பரேடாவே சரிசெய்து ஓட்ட வேண்டியிருக்கும்.

தற்போதைய நிலவரப்படி, முதலிடத்தில் ஜோன் பரேடாவும், இரண்டாவது இடத்தில் மார்க் கோமாவும், மூன்றாவது இடத்தில் பாவ்லோ கான்கல்வ்ஸ் ஆகியோர் உள்ளனர். டக்கார் ராலியின் 8வது கட்டப் போட்டி 781 கிலோமீட்டர் தூரத்திற்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
CS Santosh is proving to be very strong after stage 7 of the Dakar Rally 2015. The 31-year old rider from Bangalore finished stage 7 in the 65th position and stands in the 49th position overall.
Story first published: Monday, January 12, 2015, 14:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark