டிச.18ல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது பெனெல்லி டிஎன்டி 25 பைக்!

By Saravana

வரும் 18ந் தேதி பெனெல்லி டிஎன்டி25 ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பெனெல்லி தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், பெனெல்லி நிறுவனத்தின் மிக குறைவான விலை பைக் மாடலாக வருவதால், அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கேடிஎம் ட்யூக் 200 மாடலுக்கு மாற்றை விரும்புவோர்க்கு மிகச்சிறப்பான சாய்ஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் பார்த்துவிடலாம்.

தோற்றம்

தோற்றம்

ஹெட்லைட், டெயில், ட்ரெல்லிஸ் ஃப்ரேம் போன்றவற்றை பார்க்கும்போது, கிட்டத்தட்ட கேடிஎம் ட்யூக் 200 பைக்கின் தோற்றத்தின் சாயல் இருக்கிறது. ஆயினும், இது தனித்துவமான அழகுடன் வசீகரிகரிக்கிறது. முறுக்கு நிறைந்த பெட்ரோல் டேங்கும் பைக்கிற்கு சிறப்பான வசீகரத்தை கொடுக்கிறது. தோற்றத்தில் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும் எனலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 249.2சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 24.15 பிஎச்பி பவரையும், 21 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

அதிகபட்சமாக மணிக்கு 129 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டதாக இருக்கும்.

எடை

எடை

இந்த பைக் 150 கிலோ எடையை கொண்டிருப்பதால், கேடிஎம் ட்யூக் 200 பைக் போன்றே தினசரி பயன்பாட்டுக்கு உகந்ததாக இருக்கும்.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

முன்புறத்தில் 280மிமீ டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டமும் உள்ளன. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தை விருப்பத்தின்பேரில் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பையும் பெனெல்லி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இந்த பைக்கில்16.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. எனவே, நீண்ட தூர பயணங்களின்போதும் அடிக்கடி பெட்ரோல் நிலைய வாயிலை தொட வேண்டிய அவசியம் இருக்காது.

அசெம்பிள்

அசெம்பிள்

இந்த புதிய பைக்கை பெனெல்லி நிறுவனம் தனது இந்திய கூட்டாளியான டிஎஸ்கே மோட்டாவீல்ஸ் நிறுவனத்தின் ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்ய இருக்கிறது. எனவே, மிக சவாலான விலையில் வரும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட இருப்பதால், ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.1.70 லட்சத்திற்குள் விலை கொண்டதாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 18ந் தேதி விலை உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

கேடிஎம் ட்யூக் 200 மட்டுமின்றி, மஹிந்திரா மோஜோ மற்றும் விரைவில் வர இருக்கும் ஹயோசங் ஜிடி250என் பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
DSK Benelli has confirmed that it will be launching the TNT 25 motorcycle in India on December 18, 2015.
Story first published: Monday, December 14, 2015, 9:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X