இந்தியாவில் விற்பனைக்கு வந்தன பெனெல்லி பைக்குகள்: ரூ.2.83 லட்சம் முதல்...!!

Written By:

இந்தியாவில் புதிய பெனெல்லி பிரிமியம் பைக்குகள் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முதல்கட்டமாக இன்று 5 புதிய பைக் மாடல்களை பெனெல்லி- டிஎஸ்கே கூட்டணி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இதில், 300சிசி ரகத்தில் வந்திருக்கும் பெனெல்லி டிஎன்டி 300 பைக் இந்தியர்களை கவரும் வகையிலான அம்சங்களுடன் வந்திருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மாடல்கள் விபரம்

மாடல்கள் விபரம்

பெனெல்லி டிஎன்டி 300, டிஎன்டி 600ஐ, டிஎன்டி 600ஜிடி, டிஎன்டி 899 மற்றும் டிஎன்டி ஆர் 1130 ஆகிய 5 மாடல்கள் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.மேலும், பல புதிய மாடல்களை இந்தியாவில் இந்த ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரவும் பெனெல்லி திட்டமிட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பெனெல்லி டிஎன்டி 300 பைக்கில் 38.2 பிஎச்பி பவரை அளிக்கும் 2 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. 600சிசி மாடல்களில் 85 பிஎச்பி பவரை அளிக்கும் 4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

டிஎன்டி 300 - ரூ. 2.83 லட்சம்

டிஎன்டி 600ஐ - ரூ. 5.15 லட்சம்

டிஎன்டி 600 ஜிடி - ரூ. 5.62 லட்சம்

டிஎன்டி 899 - ரூ. 9.48 லட்சம்

டிஎன்டி ஆர் 1130 - ரூ. 11.81 லட்சம்

 இந்தியாவில் உற்பத்தி

இந்தியாவில் உற்பத்தி

இந்த பைக்குகள் முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்து டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் ஆலையில் ஒருங்கிணைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்தியாவிலேயே அதிக அளவில் உதிரிபாகங்களை சப்ளை பெறுவதற்கு டிஎஸ்கே- பெனெல்லி கூட்டணி முடிவு செய்திருக்கிறது.

இலக்கு

இலக்கு

இந்த ஆண்டு 3,000 பைக்குகளை உற்பத்தி செய்ய பெனெல்லி- டிஎஸ்கே கூட்டணி திட்டமிட்டுள்ளது. மேலும், நீண்ட கால வர்த்தக திட்டத்துடன் இந்திய மார்க்கெட்டில் கொள்கைகளை வகுத்துள்ளதாகவும் இந்த கூட்டணி தெரிவிக்கிறது.

ஷோரூம்கள்

ஷோரூம்கள்

டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூர் உள்பட நாட்டின் 9 முக்கிய நகரங்களில் பெனெல்லி ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, பிற முக்கிய நகரங்களிலும் ஷோரூம்கள் திறக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது இந்த கூட்டணி.

 
English summary
DSK-Benelli today launched five motorcycles in the Indian market today. 
Story first published: Thursday, March 19, 2015, 16:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark