தென்இந்தியாவில் டுகாட்டியின் முதல் பைக் ஷோரூம் பெங்களூரூவில் திறப்பு

Posted By:

தென் இந்தியாவில் முதல் டுகாட்டி மோட்டார்சைக்கிள்கள் நிறுவனத்தின் பைக் ஷோரூம், கர்நாடக தலைநகர் பெங்களூரூவில் திறக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனமான டுகாட்டியின் ஷோரூம்கள் டெல்லி அருகேயுள்ள, குர்கான் மற்றும் மும்பையில் சமீபத்தில் திறக்கப்பட்டன.

இந்தநிலையில், தற்போது டுகாட்டி, நிறுவனம் , தென் இந்தியாவில், தங்கள் முதல் ஷோரூமை பெங்களூரூவில் திறந்துள்ளனர்.

விஎஸ்டி நிறுவனத்துடன் கூட்டு;

விஎஸ்டி நிறுவனத்துடன் கூட்டு;

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின், கட்டுபாட்டில் உள்ள டுகாட்டி, தென் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் முன்னோடியாக விளங்கும் வி.எஸ்.டி. நிறுவனதுடன் இணைந்து இந்த புதிய டுகாட்டி ஷோரூமை திறந்துள்ளது.

வி.எஸ்.டி. நிறுவனதுடன் கைகோர்த்துள்ளது பற்றி டுகாட்டி இந்தியாவின் எம்.டி ரவி அவலூர் மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார். மேலும், பெங்களூரூவில் திறக்கபட்டுள்ள இந்த ஷோரூம், தங்களின் வர்த்தக நடவடிக்கைகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது என ரவி தெரிவித்தார்.

ஷோரூம் முகவரி;

ஷோரூம் முகவரி;

பெங்களூரூவில் திறக்கபட்டுள்ள டுகாட்டி ஷோரூம் முகவரி;

யூபி சிட்டி,

24, விட்டல் மால்யா ரோடு,

பெங்களூரூ - 560001,

கர்நாடகா.

இந்தியாவில் கிடைக்கும் மாடல்கள்;

இந்தியாவில் கிடைக்கும் மாடல்கள்;

டுகாட்டி மோட்டர் சைக்கிள் நிறுவனத்தின் சார்பில், இந்தியாவில் கிடைக்கும் மோட்டர்சைக்கிள்களின் பட்டியல் வழங்கப்படுகிறது.

(*) மான்ஸ்டர் 821

(*) மான்ஸ்டர் எஸ்2ஆர்

(*) மான்ஸ்டர் 795

(*) ஹைபர்மோட்டராட்

(*) ஹைபர்ஸ்ட்ரேடா

(*) டியவெல் 899

(*) டியவெல் 1299

(*) டியவெல் 1299 எஸ்

(*) பனிகேல் ஆர்

(*) மல்டிஸ்ட்ரேடா 1200

(*) மல்டிஸ்ட்ரேடா 1200 எஸ்

(*) ஸ்ட்ரீட்ஃபைட்டர்

(*) டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் அர்பன் எண்ட்யூரோ

பெங்களூரூ டுகாட்டியில் கிடைக்கும் மாடல்கள்;

பெங்களூரூ டுகாட்டியில் கிடைக்கும் மாடல்கள்;

இந்தியாவின் பிற பகுதிகளில் கிடைக்கும் அனைத்து டுகாட்டி மோட்டர்சைக்கிள், பெங்களூரூ டுகாட்டியிலும் கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

விலை;

விலை;

டுகாட்டி மோட்டர்சைக்கிள்களின் தேர்வு செய்யும் மாடல்களை பொறுத்து வேறுபடுகிறது.

இந்நிறுவனத்தின் விலை குறைந்த மோட்டர்சைக்கிளான மான்ஸ்டர், சுமார் 6,66,000 ரூபாய் விலையில் கிடைக்கின்றது. சமீபத்தில், வெளியான டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் அர்பன் எண்ட்யூரோ மோட்டர்சைக்கிள், 7,90,000 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் பெங்களூரூ) விலையில் கிடைக்கின்றது.

English summary
Ducati, the Italian motorcycle manufacturer, owned by the Volkswagen group has inaugurated its first showroom in South India, in Bangalore. Ducati has partnered with VST, one of South India's leading private automobile business groups. The Ducati Showroom is located in UB City, 24, Vittal Mallya Road, Bangalore, Karnataka 560001.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark