இந்தியாவில் டுகாட்டி பைக் மாடல்களின் புதிய விலை விபரம் வெளியீடு

By Saravana

இந்தியாவில் நேரடி வர்த்தகத்தை துவங்கியிருக்கும் டுகாட்டி பைக் நிறுவனம், தனது தயாரிப்புகளுக்கான புதிய விலை நிர்ணய பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

ரூ.6.74 லட்சம் முதல் ரூ.17.90 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் டுகாட்டி பைக்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. முழுமையான விலை விபரப்பட்டியல் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டீலர்கள்

டீலர்கள்

டெல்லி, மும்பை, குர்கான் ஆகிய நகரங்களில் தற்போது மூன்று ஷோரூம்களை டுகாட்டி நிறுவனம் திறந்திருக்கிறது. இதுதவிர, பெங்களூர், புனே மற்றும் ஹைதராபாத் நகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஷோரூம்களை திறக்க இருப்பதாக டுகாட்டி பைக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டிற்குள் 13 டீலர்களை திறக்க திட்டமிட்டிருக்கிறது. எனவே, அடுத்த ஆண்டு சென்னையில் ஷோரூம் திறக்க டுகாட்டி திட்டமிட்டிருக்கிறது.

ஸ்க்ராம்ப்ளருக்கு வரவேற்பு

ஸ்க்ராம்ப்ளருக்கு வரவேற்பு

டெல்லியில் நடந்த அறிமுக நிகழ்ச்சியில் அனைத்து பைக் மாடல்களையும் இந்தியாவில் விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்தது. இந்த நிலையில், டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் மாடல்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருப்பதாக அந்த நிறுவனம் இப்போது தெரிவித்துள்ளது.

மான்ஸ்ட்டர் மாடல்கள் விலை

மான்ஸ்ட்டர் மாடல்கள் விலை

  • டுகாட்டி மான்ஸ்ட்டர் 795: ரூ.6,74,019
  • டுகாட்டி மான்ஸ்ட்டர் 796 எஸ்2ஆர்: ரூ.7,76,586
  • டுகாட்டி மான்ஸ்ட்டர் 821: ரூ.9,80,436
  • டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் மாடல்கள்

    டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் மாடல்கள்

    • டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் ரெட்: ரூ.6,77,626
    • டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் யெல்லோ: ரூ.6,88,121
    • அட்வென்ச்சர் டூரர் மாடல்கள்

      அட்வென்ச்சர் டூரர் மாடல்கள்

      • டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு: ரூ.10,31,719
      • டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ரேடா: ரூ.11,34,286
      • சூப்பர் ஸ்போர்ட்ஸ் மாடல்

        சூப்பர் ஸ்போர்ட்ஸ் மாடல்

        • டுகாட்டி 899 பனிகல்: ரூ.13,39,419
        • க்ரூஸர் மாடல்கள் விலை

          க்ரூஸர் மாடல்கள் விலை

          டுகாட்டி டயாவெல்: ரூ.14,21,473

          டுகாட்டி டயாவெல் கார்பன் ரெட்: ரூ.17,42,998

          டுகாட்டி டயாவெல் கார்பன் ஒயிட்: ரூ.17,90,713

Most Read Articles
English summary
Ducati has also revealed its new pricing of their motorcycles and the Scrambler is not their most affordable offering as expected previously.
Story first published: Tuesday, June 23, 2015, 13:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X