இந்தியாவில் நேரடியாக கால் பதித்தது டுகாட்டி பைக் நிறுவனம்!

Written By:

உலகின் பிரபலமான பைக் தயாரிப்பு நிறுவனமான இத்தாலியை சேர்ந்த டுகாட்டி இந்தியாவில் நேரடியாக வர்த்தகத்தை துவங்கியிருக்கிறது.

டெல்லியில் இன்று முதல் ஷோரூமை திறந்திருக்கும் அந்த நிறுவனம், அடுத்ததாக பெங்களூரில் இரண்டாவது பைக் ஷோரூமை திறக்க உள்ளது.

டுகாட்டி பைக்
 

இந்திய சந்தையில் இரண்டு ஸ்க்ராம்ப்ளர் மாடல்களை இன்று அறிமுகம் செய்திருக்கிறது. இதுதவிர்த்து, மான்ஸ்ட்ர் 821, மான்ஸ்ட்டர் எஸ்2ஆர், மான்ஸ்ட்டர் 795, ஹைப்பர்மோட்டார்டு, ஹைப்பர்ஸ்ட்ரேடா ஆகிய மாடல்களும் விற்பனைக்கு கிடைக்கும்.

மேலும், டுகாட்டியின் பிரபல மாடல்களான டயாவெல் 899, டயாவெல் 1299, டயாவெல் 1299எஸ் மற்றும் பனிகெல் ஆர் ஆகிய மாடல்களும் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

டெல்லி, பெங்களூரைத் தொடர்ந்து, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களிலும் புதிய பைக் ஷோரூம்களை திறக்க டுகாட்டி திட்டமிட்டிருக்கிறது.

English summary
Italian motorcycle maker Ducati, has officially arrived in India, and have inaugurated its first outlet in Delhi. The motorcycle brand will soon open its next dealership in Bangalore, by this October.
Story first published: Friday, June 19, 2015, 16:32 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark