இந்தியாவில் செகண்ட் இன்னிங்சை' துவங்கும் டுகாட்டி!

இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனையை மீண்டும் துவங்க இருக்கிறது டுகாட்டி நிறுவனம்.

கடந்த 2008ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டில் டுகாட்டி கால் பதித்தது. பிரிசிசன் மோட்டார்ஸ் நிறுவனத்தை அதிகாரப்பூர்வ வினியோகஸ்தராக நியமித்தது.

இந்த நிலையில், பிரிசிசன் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மோசமான செயல்பாடுகளால் பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. இதையடுத்து, இந்திய மார்க்கெட்டிலிருந்து நேரடி வர்த்தகத்தை விலக்கியது.

இந்த நிலையில், அடுத்த மாதம் இந்தியாவில் மீண்டும் நேரடி வர்த்தகத்தை டுகாட்டி துவங்க இருக்கிறது. டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரில் புதிய மோட்டார்சைக்கிள் ஷோரூம்களை டுகாட்டி அமைக்க இருக்கிறது.

மோட்டார்சைக்கிள்களை இறக்குமதி விற்பனை செய்ய முடிவு செய்திருக்கும் அந்த நிறுவனம், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வதற்கும் திட்டமிட்டிருக்கிறது.

அனைத்து மாடல்களையும் இந்தியாவில் விற்பனை செய்வதற்கும் அந்த நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம் தற்போது ஜெர்மனியை சேர்ந்த ஆடி கார் நிறுவனத்தின் கீழ் டுகாட்டி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Ducati was present in India for a brief period before it moved out. Now the Italian superbike manufacturer is planning on it second coming to India. They plan on introducing dealerships in Mumbai and Gurgaon first and will be following it up with a showroom in Bangalore.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X