முதல் லாட்டில் 42 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இறக்குமதியானது!

Written By:

டுகாட்டியின் பிரத்யேக ஸ்டைல் கொண்ட ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இன்னும் ஓரிரு வாரத்தில் இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த நிலையில், விற்பனைக்கு தயாரான நிலையில், முதல் லாட்டில் 42 ஸ்க்ராம்ப்ளர் மோட்டார்சைக்கிள்களை டுகாட்டி சமீபத்தில் இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளது.

கடந்த மாதம் 16ந் தேதி இந்த டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் டுகாட்டி நிறுவனத்தின் மிகவும் குறைவான விலை மாடலாக வருவதால் பைக் ஆர்வலர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முன்பதிவு

முன்பதிவு

ரூ.2 லட்சம் முன்பணத்துடன் இந்த புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் மாடலுக்கு டெல்லி, குர்கான் மற்றும் மும்பை நகரங்களில் உள்ள டுகாட்டி ஷோரூம்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. ஷோரூம்களில் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெஸ்ட் டிரைவ் பைக்குகளும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஓட்டிப் பார்க்க வழங்கப்படுகின்றன.

இறக்குமதி விலை மதிப்பு

இறக்குமதி விலை மதிப்பு

ரூ.6.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான விலையில் இந்த புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இறக்குமதி மதிப்பாக இந்த புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு ரூ.4.04 லட்சம் குறிப்பிடப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதி

இறக்குமதி

இந்த புதிய டுகாட்டி பைக் மாடல் தாய்லாந்திலுள்ள டுகாட்டி ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் 75 பிஎஸ் பவரையும், 67.7 என்எம் டார்க்கையும் வழங்கும் 803சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைந்து செயலாற்றும்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ட்ரையம்ப் போனிவில், கவாஸாகி இசட்800 மற்றும் ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆகிய மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். மேலும், இதன் தனித்துவமான ஸ்டைல் பிற மாடல்களிலிருந்து வேறுபடுத்துவதால், இதற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
First Lot of Ducati Scrambler motorcycles Reached in Indian shores recently.
Story first published: Monday, May 11, 2015, 9:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark