ஸ்கூட்டர்களின் தெஸ்லாவாக வர்ணிக்கப்படும் புதிய ஸ்மார்ட் ஸ்கூட்டர்!!

Written By:

ஸ்கூட்டர்களின் தெஸ்லா என்று வர்ணிக்கப்படும் புதிய ஸ்மார்ட் ஸ்கூட்டரை கோகோரோ என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நவீன தொழில்நுட்பம் செறிந்த இந்த ஸ்கூட்டரை தைவான் நாட்டு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்கள், மிக எளிமையான சார்ஜிங் முறை மற்றும் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த மின்சார ஸ்கூட்டர் பற்றிய ஒரு சிறப்பு பார்வை.

 கோகோரோ தயாரிப்பு

கோகோரோ தயாரிப்பு

தைவான் நாட்டை சேர்ந்த கோகோரோ நிறுவனம்தான் இந்த நவீன மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. தைவான் நாட்டு போக்குவரத்தில் புதிய மாற்றத்தை இந்த ஸ்கூட்டர் ஏற்படுத்தும் என்று கோகோரோ நம்பிக்கை தெரிவிக்கிறது.

மின்சார ஸ்கூட்டர்

மின்சார ஸ்கூட்டர்

இந்த ஸ்கூட்டரில் இருக்கும் மின்மோட்டார் 98 சதவீதம் சக்தியை சக்கரங்களுக்கு விரயம் இல்லாமல் செலுத்தும். இதன் காரணமாக மிகச்சிறந்த செயல்திறனை ஓட்டுபவர் உணர முடியும். 0- 50 கிமீ வேகத்தை 4.2 வினாடிகளில் எட்டிவிடுமாம். அதிகபட்சம் மணிக்கு 95 கிமீ வேகத்தில் செல்லும் திறனை பெற்றிருக்கிறது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

இந்த ஸ்கூட்டரில் இரண்டு பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

வசதிகள்

வசதிகள்

இந்த ஸ்கூட்டரை ஸ்மார்ட்போன் மூலமாக இணைத்துக் கொண்டு பல வசதிகளை பெற முடியும். மேலும், டிஜிட்டல் கலர் டிஸ்ப்ளே கொடுக்கப்பபட்டிருக்கிறது.

பேட்டரி மாற்றும் வசதி

பேட்டரி மாற்றும் வசதி

டார்ச் லைட்டுகள் போன்றே இந்த ஸ்கூட்டரின் பேட்டரிகளை எளிதாக வெளியே எடுத்துவிட்டு வேறு பேட்டரிகளை பொருத்திக் கொண்டு செல்லலாம். பிற வாகனங்கள் போன்று சார்ஜ் ஏற்றுவதற்காக வயரை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.

சார்ஜிங் ஸ்டேஷன்

சார்ஜிங் ஸ்டேஷன்

சார்ஜ் தீர்ந்த பேட்டரிகளை எடுத்துவிட்டு, சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை போட்டுக் கொண்டு எளிதாக பயணிக்க முடியும். நேர விரயமும் தவிர்க்க முடியும். இதற்காக, தைபே நகரில் 32 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

விற்பனை மற்றும் விலை

விற்பனை மற்றும் விலை

தைவான் நாட்டின் தைபே நகரில் மட்டும் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வரும் 27ந் தேதி முதல் ஆர்டர் செய்து இந்த ஸ்கூட்டரை வாங்கலாம். இந்திய மதிப்பில் ரூ.2.60 லட்சம் விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

 
English summary
The Tesla of scooters is hitting the market this month and its price is just about as stunning as its high-tech features.
Story first published: Thursday, June 25, 2015, 15:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark