இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் ரீகால்!

Written By:

பிரேக்கில் குறைபாடுடைய பாகத்தை மாற்றித்தருவதற்காக, இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் டைனா மற்றும் சாஃப்டெயில் மோட்டார்சைக்கிள்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.

முன்புற பிரேக்கில் பாஜோ போல்ட் துருப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு துருப்பிடித்த போல்ட் கழன்று, பிரேக் திரவம் திடீரென வெளியேறி, பிரேக் ஃபெயிலியர் ஆகும் அபாயம் உள்ளது.

Harley Bike
 

எனவே, குறைபாடுடைய பாகத்தை சோதனை செய்து, மாற்றித் தருவதற்காக இந்தியாவில் 2012ம் ஆண்டு மாடல் டைனா மற்றும் சாஃப்ட்டெயில் மோட்டார்சைக்கிகள்களை திரும்ப அழைக்க இருப்பதாக ஹார்லி டேவிட்சன் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்க தனித்தனியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது மோட்டார்சைக்கிள்களை சர்வீஸ் மையத்திற்கு எடுத்து வர அறிவுறுத்தியுள்ள ஹார்லி டேவிட்சன் பிரச்னை இருப்பது தெரிந்தால் உடனடியாக சரிசெய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளது.

English summary

 The American cruiser specialist Harley-Davidson has issued a recall for certain 2012 Dyna and Softail models in India over a faulty banjo bolt with thread corrosion that could cause the brakes to fail. 
Story first published: Thursday, January 8, 2015, 12:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark