ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கிற்கு இந்தியாவிலும் ரீகால்

Written By:

குறைபாடுடைய உதிரிபாகத்தை ஆய்வு செய்வதற்காக, இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்குகள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 20ந் தேதி முதல் இந்த ஆண்டு ஜூன் 24ந் தேதி வரை தயாரிக்கப்பட்ட 3,698 ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்குகள் இந்தியாவில் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

Harley Davidson Street 750
 

ஹார்லி ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிள்களில் சிலவற்றின் எரிபொருள் உட்செலுத்து அமைப்பில் இருக்கும் கசிவடைப்பு முத்திரையில் பிரச்னை ஏற்படுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட பாகத்தை ஆய்வு செய்வதற்காக இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கை துவங்கப்பட உள்ளது.

மேலும், இந்த குறைபாடு காரணமாக விபத்துக்கும் வழிகோலும் ஆபத்து இருப்பதாகவும் ஹார்லி டேவிட்சன் கருதுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பைக்குகளை தனது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களுக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

English summary
American motorcycle manufacturer Harley-Davidson has issued a recall for its Street 750 in India.
Story first published: Monday, August 31, 2015, 10:00 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos