ஹீரோ டேஷ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்கள்... விரைவில்...!!

Written By:

ஹோண்டா ஆக்டிவாதான் ஹீரோ நிறுவனத்துக்கு கடும் தலைவலியை கொடுத்து வருகிறது. இதையடுத்து, ஹோண்டா ஆக்டிவா பிராண்டுக்கு போட்டியாக புதிய 110சிசி மற்றும் 125சிசி மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

அடுத்த இரு மாதங்களில் இந்த இரண்டு புதிய ஸ்கூட்டர் மாடல்களையும் ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருகிறது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

மாடல்கள் விபரம்

மாடல்கள் விபரம்

ஹீரோ டேஷ் மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் என்ற இரு புதிய ஸ்கூட்டர்களைத்தான் ஹீரோ விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஹீரோ டேஷ்

ஹீரோ டேஷ்

இதில், ஹீரோ டேஷ் ஸ்கூட்டரில் 110சிசி எஞ்சினும் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். ஹோண்டா ஆக்டிவா 110சிசி மாடலின் மாரக்கெட்டை அசைத்து பார்க்க இந்த ஸ்கூட்டர் போராடும்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் 125சிசி எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கும். இதிலும், சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். ஆக்டிவா 125 ஸ்கூட்டர் மாடலுடன் இது நேருக்கு நேர் மோத ஆயத்தமாகி வருகிறது.

வர்த்தக வளர்ச்சி

வர்த்தக வளர்ச்சி

இரண்டிலும் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய மாடல்கள் மூலமாக ஸ்கூட்டர் மார்க்கெட்டிலும் நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என ஹீரோ நம்புகிறது.

 
English summary
The Dash 110 and Maestro Edge 125 scooters will be introduced by Hero MotoCorp soon.
Story first published: Saturday, August 8, 2015, 9:43 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark