ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது - விபரம்!

By Saravana

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இரண்டு புதிய ஸ்கூட்டர் மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்தது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் ஹீரோ டூயட் என்ற பெயர்களில் இந்த புதிய மாடல்கள் வந்திருக்கின்றன.

இதில், ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரின் முறைப்படி விற்பனைக்கு வந்துவிட்டது. இரண்டாவது மாடலான, ஹீரோ டூயட் ஸ்கூட்டரின் விலை இன்னும் சில வாரங்களில் வெளியிடப்பட உள்ளது. கூடுதல் விபரங்கள் ஸ்லைடரில் காணலாம்.

ஹீரோ இலக்கு

ஹீரோ இலக்கு

தோற்றத்தின் அடிப்படையில், ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் ஆண் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஹீரோ டூயட் இரு பாலருக்குமான மாடலாக இருக்கும். ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை தொடர்ந்து காணலாம். மேலும், இந்த ஸ்கூட்டரில் இருக்கும் பல சிறப்பம்சங்களை ஹீரோ டூயட் ஸ்கூட்டரும் பங்கிட்டுக் கொண்டுள்ளது.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் LX மற்றும் VX என்ற இரு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். விஎக்ஸ் வேரியண்ட்டில் கூடுதலாக அலாய் வீல்கள், டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பாடி கலர் சைடு மிரர்கள், யுஎஸ்பி போர்ட் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் ஹீரோ டூயட் ஸ்கூட்டர்களில் 110.9சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக, 8.31 எச்பி பவரையும், 8.30 என்எம் டார்க்கையும் வழங்கும். சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் லிட்டருக்கு 63.8 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் டிஜிட்டல் - அனலாக் மீட்டர் கன்சோல், 3டி லோகோ, இரட்டை கிராப் ரெயில் பிடிகள், ட்யூப்லெஸ் டயர்கள், 5 ஸ்போக்குகள் கொண்ட 12 இன்ச் அலாய் வீல்கள், மறு வடிவமைப்பு பெற்ற ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகள் இடம்பெற்றிருக்கின்றன. இது சாதாரண மேஸ்ட்ரோ ஸ்கூட்டரை விட தோற்றத்தில் கூடுதல் கவர்ச்சி கொண்டதாக இருக்கிறது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த ஸ்கூட்டர் 110 கிலோ எடை கொண்டது. 1,840மிமீ நீளம், 695மிமீ அகலம், 1,190மிமீ உயரம் கொண்ட இந்த ஸ்கூட்டர் 1,265மிமீ வீல் பேஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், இருக்கையை திறக்காமல் வெளியிலிருந்து பெட்ரோல் நிரப்புவதற்கான மூடி வசதி, பெட்ரோல் நிரம்பிவிட்டதை எச்சரிக்கும் பஸ்ஸர், மொபைல்சார்ஜர், சர்வீஸ் ரிமைன்டர், ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட்டுக்கான விளக்கு, எல்இடி விளக்கு, இம்மொபைலசர் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு கொண்ட ஐபிஎஸ் பிரேக் சிஸ்டம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

பியர்ல் சில்வர் ஒயிட், பாந்தர் பிளாக், ஷூட்டிங் நைட் ஸ்டார், கேண்டி பிளேஸிங் ரெட், டெக்னோ புளூ, மேட் வெர்னியர் க்ரே மற்றும் மேட் புளூ ஆகிய 7 வண்ணங்களில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரின் எல்எக்ஸ் வேரியண்ட் ரூ.49,500 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், விஎக்ஸ் வேரியண்ட் ரூ.50,700 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

நவராத்திரி முதல் டெலிவிரி

நவராத்திரி முதல் டெலிவிரி

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிட்டாலும், அடுத்த மாதம் 13ந் தேதி நவராத்திரி பண்டிகையின் முதல் நாளிலிருந்து டெலிவிரி துவங்கப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஹீரோ டூயட் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Hero MotoCorp Maestro Edge scooter launched in India for a starting price of Rs. 49,500/- The company has also showcased the Duet; however, the market launch of the Duet will follow shortly. Both, the Hero Maestro Edge and Duet were showcased during the 2014 Auto Expo.
Story first published: Tuesday, September 29, 2015, 13:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X